பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நாயன்மார் கதை

எடுக்காவிட்டால் மூக்குக்கு மணம் நுகர வாய்ப்பில்லை. ஆகவே அதை முதலில் தண்டித்திருக்க வேண்டும். அதை கான் செய்கிறேன்” என்ருர். இவ்வாறு சொல்லிவிட்டுத் தம் உடைவாளை உருவித் தம் தேவியின் கையை வளே யோடும் துணித்து விட்டார்.

அவருடைய சிவபக்தி மற்ற உணர்ச்சிகளே யெல்லாம் அடக்கித் திக்கொழுந்தாகச் சுடர் விட்டது கண்டு, சிவனடி யார்கள் வியந்து ஆரவாரம் செய்தார்கள்

பேரரசராகிய கழற்சிங்கர் தம் மனைவி என்றும் பாராது, தவறு செய்ததற்காக அவள் கரத்தைத் துணித்த செயலே வானவர்களும் கொண்டாடினர்கள். அவர் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகும் பெருமை பெற்ருர். -

54. இடங்கழி நாயனர்

இன்று புதுக்கோட்டை என்று வழங்கும் நகரும் அதைச் சார்ந்த பகுதிகளும் பழங்காலத்தில் கோடுை என்று வழங்கிவந்தன. அங்காட்டின் தலைநகரம் கொடும் பாளுர். அது சிற்றரசர்களாகிய வேளிரின் அரசிருக்கை நகராக விளங்கியது. அந்த வேளிர்கள் வழிவழியே சிவத் தொண்டிற் சிறந்து விளங்கியவர்கள்.

அவர் மரபில் வந்தவர் இடங்கழியார். அவர் சிவபெரு மானே வழிபட்டு அவனருட் செல்வத்தைப் பெறுவதே பிற விப் பயன் என்று உணர்ந்தவர். சிவபெருமானுடைய அடித்தொண்டு நெறியே தம் வாழ்க்கையின் வழியாகக் கொண்டு உறுதியுடன் சின்ருர் அவர். வேறு எவ்விதத் துறையிலும் ஈடுபடாமல் சிவ பக்திச் செல்வத்தை வளர்த்துவந்த அவர், சிவனடியார்கள் வேண்டுவனவற்றை சந்து உவக்கும் பெற்றியரானர். சைவ நெறியும் வைதிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/82&oldid=585716" இலிருந்து மீள்விக்கப்பட்டது