பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நாயன்மார் கதை

தொண்டைச் செய்ய முடியாத கிலேயை அடைந்தேன். அதல்ை இப்படிச் செய்தாவது அமுதுாட்டலாம் என்று துணிந்தேன்’ என்ருர் அடியவர்.

இதைக் கேட்ட அரசருக்கு அவரிடம் பெருமதிப்பு உண்டாயிற்று. இவரன்ருே ஒரு காட்டுக்குக் களஞ்சியம் போன்றவர்?’ என்று எண்ணி அவரை விடுவித்ததோடு, அவருக்கு வேண்டிய கெல்லும் பொன்னும் கொடுத்து அனுப்பினர்.

அரசர் அதோடு விற்கவில்லே. இப்படி இன்னும் எத்தனை சிவனடியார்கள் வறுமையால் வாடுகிருர்களோ!' என்று மனம் வருந்தினர். "இறைவனடியார் தமக்கு வேண்டிய பொன்னும் நெல்லும் நம்முடைய களஞ்சியங் களிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்; ஒரு தடையும் இல்லை” என்று தம் நாடு எங்கும் பறை அறையும்படி செய்தார்.

அவ்வாறே அடியார்கள் திறந்திருந்த பண்டாரங் களுக்குச் சென்று தமக்கு வேண்டியவற்றை எடுத்துச் சென்றனர். இவ்வாறு அடியார்களது வறுமையைப் போக்கித் திருநீற்றின் நெறி தழைக்கும்படியாக நெடுங் காலம் புகழ் வளர்த்து வாழ்ந்தார் இடங்கழியார்.

'எண்ணில்ப்ெரும் பண்டாரம்

ஈசன்அடி யார்கொள்ள உண்ணிறைந்த அன்பினுல்

உறுகொள்ளை மிகஉஊட்டித் தண்ணளியால் நெடுங்காலம்

திருநீற்றின் நெறிதழைப்ப மண்ணில் அருள் புரிந்திறைவர் - மலரடியின் நிழல் சேர்ந்தார்'

என்று பாடுவார் சேக்கிழார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/84&oldid=585718" இலிருந்து மீள்விக்கப்பட்டது