பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செருத்துனே நாயனுர் 79 55. செருத்துணை நாயனர்

இறைவனிடம் ஆராக் காதல் கொண்ட நாயன்மார் களின் அன்புக்கும் எனத் தொண்டர்களின் அன்புக்கும் வேறுபாடு உண்டு. நாயன்மார்களின் சிவபக்தி உயிரினும் சிறந்தது. 丝_G}ö இயல்புக்கு எட்டாதது. - உலகியலே உணர்பவர்களுக்கு விளங்காதது. இயற்பகையாரைப் பற்றிச் சொல்லவந்த சேக்கிழார் அவரை 'உலகியம் பகையார் என்று கூறுகிருர். அந்த கிலே அவருக்கு மாத்திரம் இருந்ததன்று. நாயன்மார்களில் பெரும்பா லானவர்களும், சிவபக்தி அடியார் பக்திகள் முறுகிகின்று, உலகியலுக்கு மாருன செயல்களேச் செய்தவர்களே. உலகியலோடு ஒட்டி வாழும் அன்பர்களுக்கு அது வெறி யாகத் தோன்றும். உலகிய லொழுக்கத்தையே போற்றும் மக்களுக்கு அது ஒழுக்க விரோதமாகத் தோன்றும். வீரர்களுக்குக் கோழைமையாகத் தோன்றும் நிகழ்ச்சிகள் உண்டு. அஹிம்சாவாதிகளுக்கு ஹிம்சையாகத் தெரியும் நிகழ்ச்சிகளும் உண்டு. அவரவர்கள் தம் தம் கிலேயி விருந்து பார்க்கும்போது தம் சீரிய கொள்கை களுக்கு எதிராகப் பல நாயன்மார் செயல்கள் இருப்பதைக் காணலாம். -

அத்தகைய செயல்களுக்கெல்லாம் எது மூல காரணம் என்பதை ஆராய வேண்டும். அத்தகைய செயல்களேச் செய்யும் பலரை நாம் குற்றவாளிகளாகக் கருதுகிருேம். அவர்கள் என்ன நோக்கத்தோடு அதைச் செய்தார்களோ, அந்த நோக்கத்தை நாம் ஆாராயவேண்டும். நாயன்மார்கள் செய்த செயலுக்கு மூல காரணம் பக்தி, தனக்குப் பகையாக இருக்கும் ஒருவன ஒரு மனிதன் கொன்றுவிடுகிருன். அவன் கொஆலயாளி யாகிருன். எறிபத்த நாயனர் யானையைக் கொன்று, பாகர்களையும் கொல்கிருர். அவரை அரசன் கொஆலயாளியாகக் கருதவில்லை. அவர் செய்த செயலுக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/85&oldid=585719" இலிருந்து மீள்விக்கப்பட்டது