பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்த்துணை நாயனுt 83

களும் முளேக்காத மலட்டு நிலமாகியது எங்கும். ஆடுகள் மடிந்தன. மாடுகள் மறைந்தன. மக்கள் ஊர் விட்டு ஊர் ஓடினர். குழந்தையை விட்டு ஓடினவர்களும் தங்தையை விட்டு ஓடினவர்களும் தாயை விட்டு ஓடினவர்களும் தாரத்தை விட்டு ஓடினவர்களுமாக மக்கள் விலங்கினும் கொடிய இயல்பை மேற்கொண்டார்கள். பசி வந்திடப் பத்தும் பறந்து போகுமென்று தெரியாமலா பாட்டி சொன்னுள்?

செருவில்லிபுத்துாரிலும் பஞ்சப் பேயின் கோரதாண்ட வம் பல இன்னல்களை விளேத்தது. ஊர் பாழாகி விட்டது. கோயிலுக்கு வந்து தரிசனம் செய்ய மக்கள் இல்லை. அவர வர்கள் சோறு கிடைக்கும் இடம் எங்கே என்று தேடி ஓடினர்கள்.

இந்த அவல நிலையில் புகழ்த்துணையார் மாத்திரம் ஊரை விட்டு ஒடவில்லை. அவருடைய உறவினர்கள் கூட அவரை விட்டுப் போய்விட்டனர். அவர் தம் இல்லத்தை விட்டுப் போகவேண்டுமே என்று அஞ்சவில்லை. போகிற இடம் தெரியாமல் வருந்தவில்லை. தாம் வழிபடும் சிவ பெருமான விட்டுப் போக அவர் மனம் இடம் கொடுக்க வில்லை. எத்தனை துன்பம் வந்தாலும் சரி; இந்த உடம்பில் உயிர் இருக்கும் வரையில் எங்கேயிருந்தேனும் பூவும் நீரும் கொணர்ந்து எம்பெருமான வழிபடுவேன். எங் கோமானே விடமாட்டேன்' என்ற உறுதிப்பாட்டோடு இருந்தார்.

ஒருநாள் குடத்தில் நீர் கொணர்ந்தார். அவர் உண்டு பல நாட்கள் ஆகியிருந்தன. அந்தக் குடத்தைக் கோயிலுக் குள் கொண்டு வருவதற்குள் பல இடங்களில் அவர் உட்கார்ந்து உட்கார்ந்து வந்தார். மெல்லச் சிவலிங்கப் பெருமானே அணுகி நின்று கையை மேலே உயர்த்திக் குடத்திலுள்ள புனலால் திருமஞ்சனம் செய்தார். கையைத் தூக்க முடியாமல் தாக்கி அபிடேகம் செய்தார். அவரால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/89&oldid=585723" இலிருந்து மீள்விக்கப்பட்டது