பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நாயன்மார் கதை

தாங்க முடியவில்லை. அப்படியே லொட்டென்று குடத் தைச் சிவலிங்கத்தின் தலையிலே விழும்படி விட்டுத் தளர்ந்து கீழே விழுந்து மூர்ச்சையானர்- - அப்போது அவருடைய மயக்கத்தைத் தெளிவிக்க அங்கே யார் இருந்தார்கள்? யாராவது அவர் விழுந்து விட்டார் என்று கேட்டால், "பைத்தியக்காரப் பிராமணர் ஊரார் செய்ததுபோல் எங்காவது ஓடாமல் இந்தக் கல்லைக் கட்டிக்கொண்டு அழுகிருரே!” என்றுதான் சொல்லி யிருப்பார்.

ஆனல் அப்போது அந்தப் பேரன்பரைத் தெளிவிக்கச் சிவபிரான் திருவருள் முன் வந்தது. கீழே மயங்கிக் கிடந்த அவர் கனவில் சிவபெருமான் எழுந்தருளினன், 'அன்பா, உன் தவத்தை மெச்சினுேம்; உயிரை இழப்பதானுலும் நம்மைப் பிரியாமல் இருக்கும் உறுதியைக் கண்டு மகிழ்க் தோம். இனி நீ கவலையுற வேண்டாம். ஒவ்வொரு நாளும் காலையில் இங்கே பீடத்தின் கீழே ஒரு பொற்காக இருக்கும். அதை எடுத்துச் செலவு செய்து உன் உடம் பைப் பேணி, கமக்கும் வழிபாடு செய்து வருவாயாக!' என்று திருவாய் மலர்ந்து மறைந்தான்.

சோர்வு நீங்கிய அன்பர் எழுந்தார். கண்ணேத் துடைத்துக் கொண்டார். 'என்ன காரியம் செய்தோம்! எம்பெருமான் திருமுடியின்மேல் குடத்தைப் போட்டு விட்டோமே!’ என்று வருந்தினர். பிறகு தாம் கண்ட கனவை கினைந்தார். இறைவன் பீடத்தின் அடியில் பார்த்தார். கனவிலே இறைவன் சொன்னது உண்மை ஆயிற்று. அங்கே பளபளவென்று ஒரு பொற்காக கிடந்தது. அதைக் கண்டு அவர் உள்ளம் பாகாய் உருகியது. ‘எம்பெருமான் என்னளவில் பஞ்சத்தைப் போக்கி விட்டான். ஓடாமல் உழைக்காமல் ஊதியம் கொடுத்துவிட்டான். தன் பூசனையைப் புரிவதனல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/90&oldid=585724" இலிருந்து மீள்விக்கப்பட்டது