பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோட்புலி நாயனுர் 85

கைமேல் பலன் உண்டு என்று காட்டிவிட்டான்" என்று ஆனந்தக் கூத்தாடினர்.

அந்தக் காசைக் கொண்டு உணவுப் பொருள்களையும் பூசைக்கு வேண்டிய அரும் பொருள்களையும் வாங்கினர். அவர் மீண்டும் உடல் வலிமை பெற்ருர். முன் இருந்ததை விடப் பன்மடங்கு உள்ளத்தின் வலிமையையும் அடைக் தார். "என் பசியைப் போக்கவேண்டும் என்ற கவலை என் ஐயனுக்கு இருக்கிறபோது எனக்கு என்ன குறை?" என்று பெருமிதம் கொண்டார். தம்முடைய தொண்டிலே சிறிதும் குறைவின்றிப் பின்னும் சிறப்பாகப் பூசனே செய்து வழிபட்டு வாழ்ந்தார்.

57. கோம்புலி நாயனர்

ஆகிளப் பார்த்தாலே புலி போலத்தான் தோன்று வார். சொல்லும் வெடிப்பாகவே வரும். அவர் முன் கின்று பேசவே பலருக்குத் தைரியம் இருப்பதில்லை. அவருக்குப் பெயர் கோட்புலியார். கொலை செய்வதில் வல்ல புலி என்பது அந்தப் பெயருக்குப் பொருள். அவர் ஊர் சோழ நாட்டில் உள்ள திருகாட்டியத்தான்குடி.

வேளாண் குலத்தில் உதித்தவர் அவர். ஆனலும் அவருடைய குலமுதல்வர் உழுபடையை விடப் பொரு படையில் ஊற்றம் மிக்கவர். வழி வழியே அரசனுடைய படைத் தலைமை தாங்கும் குடி அது. உடல் மிடுக்கும் உள்ள மிடுக்கும் தந்தை வழி மகனுக்கு வந்துகொண்டே இருந்தன. அந்தக் கொடி வழியில் பிறந்த கோட்புலியார் தம் குடிப் பெருமையைக் காப்பாற்றுவது மட்டும் அன்று; அதை வளர்க்கும் ஆற்றலும் பெற்றிருந்தார்.

அரசனுடைய படையில் அவர் தனிச் சிறப்பான சிலை வகித்தார். பகையைப் புறங்கண்டு வெற்றி பெற்றுத் தம் அரசருக்குப் புகழ் ஈட்டுவதில் அவர் சிறந்து பீன்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/91&oldid=585725" இலிருந்து மீள்விக்கப்பட்டது