பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நாயன்மார் கதை

அவருக்கு அரசன் அவ்வப்போது பொன்னும் மணியும் வழங்கிப் பெருஞ் சிறப்புச் செய்தான்.

இந்த மிடுக்குடையார் உள்ளத்தின் ஆழத்தில் சிவ பக்தி ஊற்று இடையருது சுரந்துகொண் டிருந்தது. அரசன் வழங்கும் பொருளேக் கொண்டு வருவார். நெல் வாங்கி மலமலையாகக் குவிப்பார். சிவபெருமான் திருக் கோயில்களில் இறை வழிபாட்டில் திருவமுது படைக்கப் பயன்படுத்துவார். இப்படிச் செய்வதில் அவர் பெரிய இன் பத்தைக் கண்டார். திருவமுது முட்டுகின்ற கோயில் உண்டென்று தெரிந்தால் அங்கே நெல்லே அனுப்புவார். ஒரு முறை வேந்தனது ஏவலின்மேல் அவர் போர் செய்யப் போகவேண்டி யிருந்தது. பகைவன் படை வலிமை உடையவன். அவனோடு தொடுக்கும் போர் எத்தனை நாள் நீளும் என்று வரையறை கூற இயலாது. போர்க்களத்தை நாடிச் செல்வதற்கு முன் கோட் புலியார் தாம் இல்லா இடைக்காலத்தில் குடும்பம் எப்படி கடக்கும் என்று கவலைப்படவில்லை. சிவபெருமானுடைய பூசை முட்டாமல் நடைபெற வேண்டும் என்ற ஒன்று தான் அவர் உள்ளத்தில் மீதுணர்ந்து கின்றது. தாம் வரும் வரைக்கும் சிவபிரான் திருப்பூசையில் அமுது படைக்க வேண்டிச் செங்கெல்லைக் குதிர் குதிராகச் சேமித்தார். பல கூடுகளைக் கட்டி அவற்றில் கெல்லே கிறைத்தார். தம் உறவினர்களே அழைத்து, "எம்பெருமானுடைய திருவமு. துக்காக இந்த நெல்லை வைத்திருக்கிறேன். இதைப் பாது காத்து வழிபாட்டை இடையீடின்றி கடத்தி வாருங்கள். இதிலிருந்து யாரும் தமக்கென்று சிறிதும் எடுக்கக் கூடாது. சிவபெருமான் ஆணை' என்று சொல்லிவிட்டு அவர் போர்மேற் சென்ருர்.

சில நாட்கள் ஆயின. உரிய காலத்தில் மழை பெய்யவில்லை. வயல்கள். வளம் குன்றின. விகளவு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/92&oldid=585726" இலிருந்து மீள்விக்கப்பட்டது