பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோட்புலி நாயனுர் 87.

இல்லாமற் போயிற்று. எங்கும் பஞ்சமும் பட்டினியும் பரந்தன. பலர் உணவின்றி மடிங்தனர். கோட்புலியா ருடைய உறவினரும் பஞ்சத்தால் நலிந்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. கோட் புலியார் இறைவன் அமுதுபடிக்கென்று சேமித்து வைத்துள்ள நெல்ல இப்போது நாம் பயன்படுத்திக் கொண்டு உயிர் பிழைப்போம். பின்பு அங்கெல்லேக் கொடுத்துவிடுவோம்” என்று முடிவு கட்டினர்கள். உடனே கூடுகளைப் பிரித்து நெல்லே யெடுத்துப் பயன் படுத்திக் கொண்டார்கள். .

போருக்குச் சென்ற கோட்புலியார் வெற்றிபெற்ருர்; அரசன் வாரி வழங்கிய பொருள்களைப் பெற்றுத் தம் ஊரை நோக்கி வந்தார். அவருக்குச் சிவபிரானுடைய பூசை தடையின்றி நடைபெற வேண்டுமே என்ற கவலை இருந்தது. நாடெல்லாம் பஞ்சத்தால் கலிந்த செய்தி யைக் கேட்டு மிக வருங்தினர். வரும் வழியிலேயே அவர் எல்லாவற்றையும் விசாரித்து அறிந்துகொண்டார். தாம் சேமித்து வைத்திருக்த கெல்லேச் சுற்றத்தார் எடுத்துப் பயன்படுத்தி விட்டார்கள் என்பதும் அவருக்குத் தெரியவந்தது. அவர்கள்மேல் அவருக்குச் சினம் எழுந்தது. ஆனால் அதை வெளியிலே காட்டிக் கொள்ளவில்லை. . . . . . .

அவர் ஊர் வந்து சேர்ந்தார். அங்கே கிகழ்ந்தது ஒன்றும் அறியாதவரைப் போலவே இருந்தார். அவ ருடைய சுற்றத்தார் அவரை எதிர்கொண்டு அழைத்துச் சென்ருர்கள். தம் மாளிகைக்கு வந்த பிறகு அவர், "நம் சுற்றததார் எல்லோரையும் அழையுங்கள்; துகிலும் நிதியமும் பரிசளிக்க வேண்டும்" என்று கூறினர். எல்லோரும் ஆவலுடன் வந்தார்கள். யாவரும் வந்த பிறகு அவர்களுக்குப் பரிசளிப்பவரைப் போலக் காட்டி, "இதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/93&oldid=585727" இலிருந்து மீள்விக்கப்பட்டது