பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தர்ாய்ப் பணிவார் 89

உறவினர் அனேவரையும் கொன்று வானுலகேற்றினர் கோட்புலியார். அவருடைய பக்தி, வெறியாக முறுகி கின்றது.

58. பத்தராய்ப் பணிவார்

சிவபெருமானிடம் ஆராத அன்பு பூண்ட மெய்யடியார் களாகிய நாயன்மார்களின் வரலாற்றைப் பெரிய புராணம் கூறுகின்றது. சுந்தரமூர்த்தி காயனர் திருவாய் மலர்க் தருளிய திருத்தொண்டத் தொகையில் வரும் அடியார் களின் வரலாற்றையே சேக்கிழார் விரித்துரைத்தார். அத்தகைய அடியார்கள் அறுபத்து மூவர். அவர்களேயே அறுபத்து மூன்று நாயன்மார் என்று சைவ உலகம் வழங் கும். இந்த அறுபத்து மூவரும் முற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்தவர்கள்.

இவர்களோடு ஒன்பது கூட்டத்தினரைத் திருத் தொண்டத் தொகையில் சேர்த்துப் பாடியிருக்கிருர் சுங் தரர். தில்லை வாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று தொடங்கும்போதே தில்லை மூவாயிரவர் என்னும் கூட்டத்தினரைப் போற்றினர். திருத்தொண்டத்தொகை யில் ஏழாம் பாடலின் தொடக்கத்தில் 'பொய்யடிமை இல் லாத புலவர்க்கும் அடியேன்” என்று சிவபக்தியிற் சிறந்த புலவர் கூட்டமாகிய தொகையடியாரைச் சிறப்பித்தார். பத்தாம் பாடலில் பத்தராய்ப் பணிவார், பரமனையே பாடு வார், சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார், திருவாரூர்ப் பிறந்தார், முப்போதும் திருமேனி தீண்டுவார், முழுறுே பூசிய முனிவர், அப்பாலும் அடிச் சார்ந்தார் என்று எழு தொகையடியார்களைப் பாடுகிருர். ஆகத் தொகையடியார் கள் ஒன்பது வகையினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/95&oldid=585729" இலிருந்து மீள்விக்கப்பட்டது