பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நாயன்மார் கதை

பத்தராய்ப் பணிவாராகிய காயன்மார்கள், இறைவ னிடம் அன்புடையவர் யாரைக் கண்டாலும் கூசி மிக்க மனக்களிப்போடு கொண்டாடி மகிழ்வார்கள். தாய்ப் பசுவைக் கன்று அணைவது போல் சார்ந்து பணிவும் இனி மையும் உடைய மொழிகளைப் பேசுவார்கள். சிவபெரு மானை வழிபடுகிறவர்களைக் கண்டால் மிக உவந்து இன் புறுவார்கள். பாவனையிலுைம் பார்வையிலுைம் பயன் பெறுவார்கள்.

சிவபெருமானையும் அடியார்களையும் ஆராத காதலி ல்ை பூசிப்பார்கள். மிக்க தவமுடையவர்கள் அவர்கள். தம்முடைய உடம்பால் சிவபெருமானுக்குரிய திருத் தொண்டை இடைவிடாமல் செய்து கொண்டே இருப்பார் கள். சிவபிரான் திருக்கதைகளேக் கேட்டு அயலறியாதபடி உருகி அன்பு செய்வார்கள். . -

இறைவனேப் பணிந்து நெஞ்சு நெகிழ்ந்து பேரானங் தம் பெற்று, பேச்சு எழாமல் தழுதழுப்பக் கண்ணிர் தாரை தாரையாகப் பொழிந்து மேலணிந்த திருநீற்றை அழிக்க, உடம்பெல்லாம் புளகம் போர்ப்ப உடல் கடுங்கு வார்கள். அவர்கள் மிகச் சிறந்த குணம் உடையவர்கள். கின்ருலும் இருந்தாலும், கிடந்தாலும் கடந்தாலும், மென்ருலும் துயின்ருலும், விழித்தாலும் இமைத்தாலும் மன்ருடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமல் குன்ருத அன்புணர்ச்சியோடு விளங்குபவர்கள் அவர்கள். சிவ பிரான கினேந்து தவம் பல செய்வார்; ஆயினும் அதனல் வரும் பயனே வேண்டாதவராகி உலகத்தார் நன்மை அடையும்படி செய்யும் பெருந்தகையாளர் அவர்கள்.

59. பரமனையே பாடுவார்

மனிதனுடைய கரணங்கள் மூன்று; மனம் வாக்குக் காயம் என்பவை அவை. விலங்கினங்களுக்கும் மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/96&oldid=585730" இலிருந்து மீள்விக்கப்பட்டது