பக்கம்:நாயன்மார் கதை-3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரமனயே பாடுவார் 9I.

உண்டு; வாக்கு உண்டு; காயம் உண்டு. ஆனால் மனித னுக்கு அவை கன்ருக வளர்ந்திருக்கின்றன. அவனுடைய வாக்கு ஈடே இல்லாமல் சிறப்புற்றிருக்கிறது. அதனல் விலங்கினங்களே வாயில்லாப் பிராணிகள் என்றும், மனிதனே வாய்ள்ளவன் என்றும் வழங்குகிருேம் வாயுள்ள பிள்ளே பிழைக்கும் என்பது பழமொழி. வாயுள்ள மனிதனே இறைவன் திருவருளைப் பெறுதற்கு உரியவன். -

மனிதன் தன் கருத்துக்களைச் சொல்லும் ஆற்றல் பெற்றவன். அதற்குரிய கருவியாகிய மொழியை அவன் வளப்படுத்தி யிருக்கிருன். அவன் தன்னுடைய மூன்று கரணங்களாலும் இறைவனே வழிபட்டால் இறையரு. ளேப் பெற்று இன்பம் பெற முடியும்.

வாழ்த்த வாயும் நினேக்க மடநெஞ்சும்

தாழ்த்தச் சென்னியும் தந்த தக்லவனே'

என்று காவுக்கரசர் அருளினர். இந்தக் கரணங்களைக் கொண்டு இறைவனே வழிபடுவதே இவற்றைப் பெற்ற தற்குப் பயன். உடம்பினால் வழிபடுவதை மிகுதியாகச் செய்பவர்களைப் பத்தராய்ப் பணிவார் என்றும், வாயில்ை வழிபடுவதைச் சிறப்பாக உடையவர்களைப் பரமனேயே பாடுவார் என்றும், உள்ளத்தால் சிறப்புத் தொண்டு. புரிபவர்களேச் சித்தத்தைச் சிவன் பாலே வைத்தாரென்றும் மூவகைத் தொகை யடியாராக வைத்துத் திருத்தொண்டத். தொகை பாடினர் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

தென்தமிழிலும் வடமொழியிலும் பிற மொழிகளி லும் இறைவனுடைய புகழைப் பாடிய பாடல்கள் பல உண்டு. இறைவனிடம் அன்பு செய்த பெருமக்கள் உருகிப் பாடியவை அவை. அவற்றை வாயாரப் பாடி ஆடும் அன்பர்கள் யாவரும் பரமனேயே பாடுவார் ஆவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-3.pdf/97&oldid=585731" இலிருந்து மீள்விக்கப்பட்டது