பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நாயன்மார் கதை

செய்யும் ஓமத்தியில் இட்டு எரித்து எடுத்த திருநீறு கற்ப விபூதி என்று பெயர் பெறும். . . . .

காட்டிலே உலர்ந்து கிடக்கும் பசுவின் சாணத்தைக் கொணர்ந்து பொடியாக்கிக் கோஜலம் இட்டுப் பிசைந்து, அஸ்திர மந்திரங்கூறி உருண்டையாக உருட்டி உலர்த்திப் பின்பு ஓமத்தீயில் இட்டு எடுக்கும் திருநீற்றை அதுகற்பம் எனறு கூறுவா.

பசுக்கள் மேயும் காட்டில் மரங்கள் பற்றி எரிந்து வெந்த மீறும், பசுக்களைக் கட்டிவைத்த இடங்களில் தீப் , பிடித்து வெந்த றுேம், செங்கல் சுட்ட காளவாயில் உண்டா கிய மீறும் ஆகியவற்றைத் தனித்தனியே கோஜலம் விட் டுப் பிசைந்து உலர்த்தி, மடங்களிலுள்ள சிவாக்கினியில் விதிப்படி இட்டு எடுத்ததை உபகற்பம் என்று சொல் வார்கள். -

இந்த மூன்றும் சிவதீட்சை பெற்றவர்கள்அணிவதற்கு உரியவை.

மலையிலும் பூமியிலும் இடி விழுந்த இடத்திலும் தானே உண்டாகிய சாம்பலை அகற்பம் என்பர். திகூைடி யில்லாதவர் அணிவதற்குரியது இது.

மேலே சொன்ன கற்பம், அதுகற்பம், உபகற்பம் என்ற மூன்றும் லெளகிக பஸ்மம் என்று கூறப்பெறும். அந்தணர் யாகம் செய்ய அதில் வந்த நீறு வைதிக பஸ்மம் எனப்படும்.

திருநீற்றைச் சிறிதளவு கையில் எடுத்து அகம் புறம் ஆகிய இரண்டிடத்தும் சுத்தி உண்டாகும்படி தியானித்து, சிறிது தென்மேற்கில் அஸ்திர மந்திரங்கூறித் தெறித்த பின்பு அணியவேண்டும். சிவசங்கிதியிலும், ஹோமத்தியின் முன்பும், குருவின் முன்பும், கடக்கும் போதும், தாய்மை யற்ற இடங்களிலும் திருநீறு அணியலாகாது. அணியும் போது தரையிற் சிந்தாமல் அணிய வேண்டும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/10&oldid=585750" இலிருந்து மீள்விக்கப்பட்டது