பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாலும் அடிச்சார்ந்தார் s

திரிபுண்டரமாகவேனும், பிறை வடிவமாகவேனும், தீப வடிவமாகவேனும், வட்ட வடிவமாகவேனும் திரு கீற்றை அணியலாம். உடம்பு முழுவதும் வெண்ணிறு பூசுவது முனிவர்களின் இயல்பு. -

தம் திருமேனி முழுவதும் திருநீறு பூசும் வழக்கம் உடையவர்களே வடநாட்டில் மிகுதியாகப் பார்க்கலாம். தமிழ் நாட்டிலும் சிலர் உளர்.

அத்தகைய அடியார்களைத் தொகையடியார்களில் ஒரு வகையாராக்கி,

"முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்' என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிரு.ர்.

64. அப்பாலும் அடிச்சார்ந்தார்

சுந்தரமூர்த்தி நாயனர் திருத்தொண்டத் தொகையில் அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பாடினர். அவர்கள் யாவரும் தமிழ் காட்டில் இருந்தவர்கள். இந்த அறுபத்து மூன்று பேர்களே சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்றவர்கள் என்று சொல்ல இயலாது. திருவருளால் பாடிய திருத்தொண்டத் தொகையில் அடங்காதவர்கள் பலர் உண்டு. அகத்தியர் தமிழ் நாட்டில் இருந்து வாழ்க் தவர். அவர் பெரிய சிவபக்தர். அவரைத் தனியே சுந்தர மூர்த்தி நாயனர் பாடவில்லை. அந்த அந்தத் தலங்களில் இறைவனே வழிபட்டுப் பேறு பெற்றவர்கள் பலர். அவர் கள் யாரையும் எடுத்துப் போற்றவில்லை. சிவபக்தர்கள் அனேவரையும் ஒருவர் விடாமல் பாடவேண்டும் என்று ஆராய்ச்சி செய்து தேடித் தொகுத்துச் சொல்ல முயல வில்லே சுந்தரர். ஆதலின் திருத்தொண்டத் தொகையில் வாராமல் சுந்தரர் காலத்துக்கு முன்பு பல சிவபக்தர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/11&oldid=585751" இலிருந்து மீள்விக்கப்பட்டது