பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s $tukurf கதை

கள் இருப்பது இயல்பே. சிறந்த சிவாதுபூதிச் செல்வரா கிய சங்கராசாரியரைத் திருத்தொண்டத் தொகை குறிக்க வில்லை. அவர் பிறந்த இடம் அக்காலத்தில் தமிழ் நாட்டில் தான் சேர்ந்திருந்தது. -

இந்தக் கருத்துச் சுந்தரருக்கே தோன்றி யிருக்கிறது. தனியடியார்கள் அறுபத்து மூவரையும் தொகையடியார் ஒன்பதின்மரையும் பாடினர். தொகையடியார்களில் ஒரு வகையினரில் எல்லாச் சிவனடியார்களையும் அடக்கி விட் டார். அப்பாலும் அடிச்சார்ந்தார் என்ற பெயரோடு திருத் தொண்டத் தொகையில் அடங்காத சிவனடியார் அனை வரையும் போற்றினர்.

"அப்ப்ாலு மடிச்சார்ந்தார் அடியர்ர்க்கும் அடியேன்” என்பது திருத்தொண்டத்தொகை. அதில் உள்ள 'அப் பாலும் என்ற சொல்லச் சேக்கிழார் விரித்துரைக்கிரு.ர். மூவேந்தருடைய ஆட்சிக்கு உட்பட்ட தமிழ் நாட்டுக்கு அப்பால் வேறு மண்டலங்களில் சிவபிரான் அடியைச் சார்ங் தவர்கள் இந்தத் தொகையில் சேர்வார்கள். இது இடத் தில்ை அப்பாற்பட்ட எல்லேயில் இருப்பவர்களேக் குறித்தது. திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடப்பெருமல் முன்பு வாழ்ந்தவர்களும் இந்தத் தொகையடியார் குழுவில் சேர்ந்தவர்களே. அவரோடு மட்டுமா? திருத்தொண்டத் தொகையில் வரும் நாயன்மார்களுக்குப் பின்பு வாழும் சிவனடியார்களும் இத்தொகையில் சார்ந்தவர்களே. எல்லா இடத்தும் எல்லாக் காலத்தும் வாழ்ந்த சிவனடியார் யாரா யினும், வேறு வகையால் கூறப்பெருவிட்டால் அப்பாலும் அடிச்சார்ந்தார் என்னும் தொகையடியாருக்குள் அடங்கி விடுவார்கள். மார்க்கண்டேயர் முதலியோர் இடத் தில்ை அப்பாற்பட்டவர்கள். இவர்கள் யாருமே தொகை யடியார்களைச் சேர்ந்தவர்கள். சேக்கிழார் கூறும் பாடல் வருமாறு: . . . . . . . . . . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/12&oldid=585752" இலிருந்து மீள்விக்கப்பட்டது