பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூசலார் நாயனுர் 7

'மூவேந்தர் தமிழ்வழங்கு நாட்டுக் கப்பால்

முதல்வளுர் அடிச்சார்ந்த முறைமை யோரும் தாவேய்ந்த திருத்தொண்டத் தொகையிற் கூறும்

நற்ருெண்ட்ர் காலத்து முன்னும் பின்னும் பூவேய்ந்த நெடுஞ்சடைமேல் அடம்பு தும்பை

புதியமதி நதிஇதழி பொருந்த வைத்த சேவேந்து வெல்கொடியான் அடிச்சார்ந் தாரும்

செப்பிய அப் பாலுமடிச் சார்ந்தார் தாமே," (மூவேந்தர் - சேர சோழ பாண்டியர். கா ஏய்ந்த . காவில் பாடலாகப் பொருந்திய, இதழி - கொன்றை. சே ஏந்து வெல் கொடியான்; சே-இடபம். செப்பிய-சுந்தரர் திருவாய் மலர்ந்த.)

65. பூசலார் நாயனர்

தொண்டை மண்டலத்தில் திருகின்றவூர் என்ற பதியில் அந்தணர் குலத்தில் தோன்றினர் பூசலார். அவ் ஆரின் பெயரைச் சிதைத்து இப்போது தின்னனுTர் என்று வழங்குகின்றனர். பூசலார் கல்லொழுக்கத்திற் சிறந்தவர். மறைநூற் பயிற்சி மிக்கவர். சிவனடியார்பால் பேரன்பு பூண்டு அவர்களுக்கு வேண்டியவற்றை கல்கும் வள்ளல்.

அவர் தம் ஊரில் ஒரு பெரிய சிவலாயத்தைக் கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்குரிய செல் வத்தை ஈட்ட முயன்ருர். அவராற் பெற முடியவில்லை. ‘இனி என் செய்வேன்!" என்று வருந்தினர். பிறகு அவ ருக்கு ஒர் எண்ணம் உண்டாயிற்று. ‘புறத்தே யாவரும் காணக் கோயில் எடுப்பதற்குத்தானே பலருடைய உதவி வேண்டும்? நான் அகத்திலே என் மனம் விரும்பும் அளவில் பெரிய கோயிலாகக் கட்டுகிறேன்' என்று ஒரு தீர்மானம் செய்து கொண்டார். உடனே அவர் ஓரிடத்தில் அமர்ந்து கண்மூடி மனத்திலே கோயில் கட்டத் தொடங்கினர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/13&oldid=585753" இலிருந்து மீள்விக்கப்பட்டது