பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& நாயன்மார் கதை

கோயிலுக்கு என்ன என்ன பண்டங்கள் வேண் டுமோ அவற்றையெல்லாம் வாங்கித் தொகுத்துக் கொண்டதாகப் பாவனையில் அமைத்தார். அவருடைய பாவனையின் உறுதியிஞல் அவ்வாறு அமைத்த தோற்றம் கலேயாமல் அகக் காட்சியில் கின்றது. அவருடைய அக உலகத்தில் கோயில் உருவாவதற்குமுன் கடை பெற வேண்டிய காரியங்கள் நடைபெற்றன. கற்கள் வங்தன. வண்டிகள் வந்தன. ஆட்கள் வந்தார்கள். சிற்பியர் வந்து சேர்ந்தனர். இவ்வளவும் பூசலார் தம் உள்ளத்தே விறுத் திக் கொண்டார். - - -

ஒரு கல்ல நாள் பார்த்து, அந்த நாளில் அவர் தம் அகக் கோயிலுக்கு அஸ்திவாரம் போட்டார். சிற்பியரும் தொழிலாளர்களும் வேலையில் முனைந்தனர். படை படை யாகக் கற்சுவர்கள் எழும்பின. சுவர்களின் மேல் தளம் அமைத்தார். விமானத்தையும் செவ்வையாக அமைத்தார்.

இந்த வேலே ஒரு காள் இரண்டு காட்களில் கடை பெறவில்லை. புறத்தே ஒரு கோயில் கட்ட எவ்வளவு நாட்கள் செல்லுமோ அவ்வளவு நாட்கள் ஆயின. மனத்தினல் எதையும் எளிதில் செய்து விடலாம் என்று ாமக்குத் தோன்றும். ஒரு பெரிய கோயிலை கம் மனத்துக் குள் ஒரு கணத்தில் கற்பனை பண்ணி நிறுத்திவிடலாம். ஆல்ை அது அடுத்த கணமே மறைந்துவிடும்; அவ்விடத் தில் கம்முடைய வீடு வந்து கிற்கும்; அல்லது ஒரு கருவேல மரம் காட்சி அளிக்கும்; வேறு யாராவது வந்து சிற்பார் கள். ஒரு கணத்தில் பல காட்சிகளைக் காணும் இயல்பு கம் மனத்திற்கு உண்டு. ஆனல் கண்டதை கிலேயாகக் காணும் வழி நமக்குத் தெரியாது. அதற்குரிய ஆற்றல் நமக்கு இல்லை. - -

கண்ணே மூடினல் கம் அகத்தே இருள் வந்து முன்னே ரிற்கிறது. சிறிதே பகற் கனவில் ஈடுபட்டால் உள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/14&oldid=585754" இலிருந்து மீள்விக்கப்பட்டது