பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூசலார் நாயனுர் 9

தோன்றுகிற காட்சி தெளிவாகத் தோன்ருது. கம்முடைய அன்புக்குரிய குழந்தையை மனத்தில் கினைத்துப் பார்க் கிருேம். அதன் திருவுருவம் ஏதோ மங்கலாக ஒரு கணம் தோற்றுமேயன்றி, கேரே காணுவது போலத் தோற்ருது.

மனத்தில் எந்த உருவமும் தெளிவாகத் தோற்ருது என்று ஒருவர் சொல்லலாம். அப்படி அன்று. கனவு கிலேயில் மனம் ஒன்றுதான் தொழிற்படுகிறது. கனவிலே நாம் காணும் காட்சிகள் அப்போது தெளிவாகவே இருக் கின்றன. கனவில் வரும் ஆட்களே முழு உருவத்தில் தெளிவாகப் பார்க்கிருேம். அப்படிப் பார்க்கிறது அகக் கண்தான். அதுபோல நாம் விழித்திருக்கும்போது கண்ணே மூடிக்கொண்டு பார்க்க முடிவதில்லை. காரணம் என்ன?

தாங்கும்போது நம்முடைய இந்திரியங்கள் ஐந்தும் மூடிக் கிடக்கின்றன. துரங்குகிறவன் கண்ணே மூடிக் கொண்டு துரங்குகிருன்; அதனல் வெளியேயுள்ள வற்றை அவன் பார்ப்பதில்லை. காதை மூடிக் கொள்ளா விட்டாலும் அது அடைபட்டிருக்கிறது; வெளியிலே பேசும் பேச்சை அவன் கேட்பதில்லை. இப்படியே இந்திரி யங்கள் யாவும் அடைத்துக் கிடப்பதல்ை அகத்தே தோற்றும் கனவுக் காட்சி நேரிலே காண்பதுபோலத் தெளிவாக இருக்கிறது. -

துளங்காமல் விழித்திருக்கும்போதே ஐந்து இந்திரி யங்களும் தொழிற்படாமல் அடக்கும் ஆற்றல் கமக்கு உண்டானல் காம் கண் முடிச் சிந்திக்கும்போது தெளி வான காட்சியைக் காணலாம். தியானம் செய்து பழகின வர்களுக்கு இத்தகைய காட்சி கிடைக்கும். மானசிக

பூசையால் இறைவன் திருவுருவத்தை அகத்தே இருத்திப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/15&oldid=585755" இலிருந்து மீள்விக்கப்பட்டது