பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நாயன்மார் கதை

பாவனையால் அபிடேகம், அருச்சனை முதலியவை செய்யும் முறை உண்டு. அப்படிச் செய்யும்போது மனத்தில் கிறுத்திய மூர்த்தி சலனமின்றி மங்காமல் மாருமல் இருப்பது அரிது. பல காலம் தியானம் பண்ணிப் பண்ணிப் பழகினால்தான் அகக் காட்சி ஓடாமல் விற்கும். அதற்கு மிகவும் நீடித்த பழக்கம் வேண்டும். மன ஒருமைப்பாடும் வேண்டும்.

பூசலார் அத்தகைய தியானப் பழக்கமும் அதன் முதிர்ச்சியால் கினைத்தது அப்படியே மனத்தில் விலை கிற்கும் அதுபவமும் பெற்றவர். அதனல் ஒரு முழம் கட்டிடம் உயர்ந்ததாக அவர் உள்ளக் கோயிலில் கண்டால், மறுபடியும் அதை உயர்த்துகிற வரையில் அந்தக் காட்சி மாருமல் கின்றது.

இவ்வாறு தம்முடைய பாவனையால் பூசலார் பெரிய கோயிலேயே அகத்தே எழுப்பி விட்டார். தூபி கட்டு, சுதை வேலைகளைச் செய்து, கூபம் அமைத்து, சுற்று மதிலும் எடுத்தார். புறத்தே, தீர்த்தமும் அமைத்தாயிற்று. இனிச் சிவலிங்கப் பிரதிஷ்டையும் கும்பாபிஷேகமும் ஆக வேண்டும்.

இரவு பகல் இதுவே வேலையாக அமர்ந்து பூசலார் அகத்தே திருக்கோயிலைச் சமைத்தார். கும்பாபிஷேகத் துக்குரிய நல்ல நாளும் வைத்து விட்டார். -

அக்காலத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்த பல்லவ மன்னன் அந்நகரில் ஒரு பெரிய சிவாலயத் தைக் கட்டி வந்தான். அது முற்றுப் பெற்றது. கும்பா பிஷேகத்துக்குரிய நாளும் வைத்து விட்டான். அந்த நாளுக்கு முதல் நாளில் இரவு மன்னன் துயிலும்போது இறைவன் அவன் கனவிலே தோன்றி, "திருகின்ற ஊரில் உள்ளாம்முடைய அன்பளுகிய பூசல். பல நாட்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/16&oldid=585756" இலிருந்து மீள்விக்கப்பட்டது