பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூசலார் நாயனுர் I}.

எண்ணிச் செய்த ஆலயத்தில் காளைக்குக் கும்பாபிஷேகம். நாம் அங்கே போக வேண்டும்; ஆதலால் நீ பின்னல் ஒரு. காளில் கும்பாபிஷேகத்தை வைத்துக் கொள்' என்று. அருள் செய்தான். பூசலார் பெருமையை உலகமெல்லாம் அறிந்துகொள்ள வேண்டுமென்ற திருவுள்ளத்தினல் இறைவன் இதனைச் செய்தான்.

துயில் நீங்கிய அரசன், "இறைவன் விரும்பிப் புகும் அந்த ஆலயத்தை நாம் போய்ப் பார்த்து அதனைக் கட்டின பெரியவரையும் வணங்க வேண்டும்" என்ற விருப்பத் தினுல் காஞ்சியிலிருந்து புறப்பட்டுத் திருகின்ற ஊருக்குச் சென்ருன். அங்குள்ளாரை, 'பூசலார் எழுப்பிய கோயில் எங்கே இருக்கிறது?’ என்று கேட்டான். "அவர் கோயில் கட்டியதாகத் தெரிய வில்லையே!” என்று அவர்கள் கூறவே அரசன் மயங்கி, அவ்வூரிலுள்ள மறையவர்களே யெல்லாம் அழைத்து வரச் செய்தான். யாவரும் வந்த பிறகு, ‘பூசலார் என்னும் அந்தணர் உங்களில் யார்?' என்று கேட்டான். அவர்கள், "இங்கே வரவில்லை; இந்த ஊரில்தான் இருக்கிரு.ர். காங்கள் போய். அழைத்து வருகிருேம்" என்று கூற, அரசன், "அவரை இங்கே அழைத்து வர வேண்டாம். நானே அவர் உள்ள இடத்துக்குப் போகிறேன்" என்று அவரைப் பார்க்கப் புறப்பட்டான்.

பூசலார் இருந்த இடத்தை கண்ணிய வேந்தன் அங்கே கோயில் ஒன்றையும் காணவில்லை. வேறு இடத்தில் கட்டு: கிருர் போலும் என்று எண்ணினன். அவரைத் தொழுது, "ங்ேகள் இங்கே எம்பெருமானுக்காகக் கட்டிய கோயில் எது? இன்றுதான் நீங்கள் பெருமானப் பிரதிஷ்டை செய்யப் போகிறீர்கள் என்று அவன் அருளினன். அதனல் உங்களையும் கோயிலையும் தரிசித்து வணங்கும் பொருட்டு வந்தேன்' என்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/17&oldid=585757" இலிருந்து மீள்விக்கப்பட்டது