பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H2 நாயன்மார் கதை

பூசலார் வியப்பில் ஆழ்ந்தார். "அடியேனேயும் ஒரு பொருளாகக் கொண்டு எம்பெருமான் அருள் செய்தார் போலும் புறத்தே ஆலயம் அமைக்க என்பால் பொருள் இல்லாமையால் வேறு வழியின்றி என் மனத்தினல் கோயில் எடுக்கலானேன்!" என்று கூறினர்.

அது கேட்ட அரசனுக்கு ஒன்றும் விளங்கவில்லே. 'மனத்தினல் எப்படிக் கோயில் கட்டுவது?’ என்று கேட்டான். சிவனடியார் தாம் ஒவ்வொரு காளும் சிறிது சிறிதாகப் பாவனையினுல் ஆலயத்தை உருவாக்கிய திறத்தைச் சொன்னர். அரசன் அதைக் கேட்டுப் பெரு வியப்படைந்து, "இந்த அன்பருடைய பெருமைதான் இருந்தவாறு என்னே!” என்று உருகினன். உலகத்தை ஆளும் ஆட்சி அந்தப் பெரியார் கையில் இருப்பதை அறிந்து அதிசயித்தான். 'நான் கட்டின கோயிலே உலக மெல்லாம் காணலாம். ஆனல் இவர் கட்டின கோயிலே இறைவன் கண்டு அதற்குள் புகும் ஆர்வம் உடையவகை இருக்கிருனே! இந்தப் பெரியார் முன் இந்தப் புல்லியேன் எம்மாத்திரம்' என்று எண்ணி கைந்தான். தன் முடி தாழப் பூசலார் காலில் வீழ்ந்து போற்றினன்; ஆடினன்; பாடினன். பிறகு விடைபெற்றுக் காஞ்சிக்குச் சென்ருன்.

பூசலார் தாம் எண்ணியபடியே குறிப்பிட்ட வேளையில் தம்முடைய உள்ளத்தில் எழுந்த திருக்கோயிலில் சிவ பெருமானே கிறுவிப் பூசனை புரியத் தொடங்கினர். அந்தக் கோயில் அவர் உள்ளத்தில் ஒரு காலக்கு ஒருகால் பொலிவு பெற்று விளங்கியது. நாள்தோறும் உள்ளத் தால் ஆசை கீரப் பூசை செய்து வழிபட்டார். o -

இப்போது அந்த உள்ளக் கோயிலை வினைப்பூட்ட ஹிருதயாலயேசுவரர் திருக்கோயில் திருகின்ற வூரில் இருக்கிறது. * . . . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/18&oldid=585758" இலிருந்து மீள்விக்கப்பட்டது