பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கையர்க் கரசியார் 1$

66. மங்கையர்க் கரசியார்

திருஞான சம்பந்தப் பெருமானல் பாண்டி காட்டில் சைவ நெறி தழைப்பதற்குக் கருவியாக இருந்தவர்கள் பாண்டிமாதேவியாகிய மங்கையர்க்கரசியாரும் குலச்சிறை யும் ஆவர். கூன் பாண்டியனுடைய மனேவியும் சோழ மன்ன னுடைய மகளுமாகிய மங்கையர்க்கரசியார் தம் கணவன் நெறியல்லா நெறி சென்று சைவர்களுக்குத் திங்கு செய்ய உறுதுணையாக இருந்ததை அறிந்து அவனைத் திருத்த முற்பட்டார். தம் கணவரைத் திருத்திப் பணிகொண்ட கற்பரசியர் மிகச் சிலர். அவருள் சிறந்தவர் மங்கையர்க் கரசியார். -

திருஞான சம்பந்தர் தம்முடைய திருவாக்கால் அரசி யாரைப் பலபடியாகப் பாடியுள்ளார்.

  • மங்கையர்க் கரசி வளவங்கோன் பாவை

வரிவ8ளக் கைமட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி ’ செந்துவர் வாயாள் சேலன கண்ணுள்

சிவன்திரு நீற்றி&ன வளர்க்கும் பந்தணை விரலாள் பாண்டிமா தேவி ' * முத்தின் தாழ் வடமும் சந்தனக் குழம்பும்

நீறுந்தன் மார்பினின் முயங்கப் பத்தியார் கின்ற பாண்டிமா தேவி " " மண்ணெலாம் நிகழ மன்னனுய் மன்னும்

மணிமுடிச் சோழன்றன் மகளாம் பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி ' * பன்னலம் புணரும் பாண்டிமா தேவி ' என்று ஒரு தேவாரப் பதிகத்தில் புகழ்ந்திருக்கிரு.ர். அன்றியும் அப்பிராட்டியாரை விளித்தே ஒரு திருப்பதிகம் பாடி யிருக்கிரு.ர். * . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/19&oldid=585759" இலிருந்து மீள்விக்கப்பட்டது