பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனுள் 2i

இறைவன் புகழை யாழிசைப் பாட்டினல் வடித்துப் பாடினர். -

திருவாலவாய்த் தரிசனத்தின் பின் இவர் வேறு பல திருப்பதிகளுக்குச் சென்று வழிபட்டுத் திருவாரூரை வந்து அடைந்தார். அங்கும் திருக்கோயில் வாயிலுக்குமுன் சென்று இறைவன் புகழைப் பாடினர். இறைவன் அரு ளால் தொண்டர்கள் இவர் பெருமையை நன்கு அறிந்து தனியே வடதிசையில் ஒரு புதிய வாயிலே உண்டாக்கி அதன் வழியே இவரைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்ருர்கள். உள்ளே சென்று மூலத்தானத்து மூர்த்தி யையும் அமரவிடங்கத் தியாகேசனேயும் தரிசித்துப் பாடி இன்புற்ருர்.

அங்கிருந்து புறப்பட்டு வேறு தலங்களுக்குச் சென்று வழிபாடு ஆற்றிச் சென்றுகொண் டிருந்தார் திருலே கண்டத்துப் பெரும்பாணர். அப்போது சீகாழியில் இறைவி தந்த ஞானப்பாலே உண்டு தெள்ளமுதத் தேவா ரப் பதிகங்களை வெள்ளமெனப் பாடி வருகின்ருர் திருஞானசம்பந்தர் என்ற செய்தி தமிழ்நாடெங்கும் பரங் திருந்தது. அங்கங்கே உள்ளவர்கள் சீகாழிக்குச் சென்று சம்பந்தப் பெருமானைத் தரிசித்து வந்தார்கள். திருலே கண்ட யாழ்ப்பாணரும் இந்தச் செய்தியை அறிந்து தம் முடைய மனைவியாருடன் சீகாழியை அடைந்து ஞான சம்பந்தரை வணங்கினர். சம்பந்தர் அவரை உபசரித்து அவருக்குத் தனியே இருக்கை யமைத்து அதில் தங்கும்படி செய்தார். யாழ்ப்பாணர் அப்பெருமானுடன் எப்போதும் இருந்து அவருடைய திருப்பதிகங்களே யாழிலிட்டுப் பாட வேண்டும் என்ற தம் விருப்பத்தை எடுத்துரைத்தார். சம்பந்தர் அவ்வாறே ஆகுக என்று அருள, அதுமுதல் தேவாரத் திருப்பதிகத்தை உடனிருந்து யாழிற் பொருத்தி வாசிக்கும் தொண்டைச் செய்து இன்புற்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/27&oldid=585767" இலிருந்து மீள்விக்கப்பட்டது