பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. நாயன்மார் கதை

இசைப் பாடல்களே யாழில் இசைத்து வழிபட்டு வந்தார். சோழ நாட்டில் உள்ள திருத்தலங்களைப் பணிந்து பிறகு ஆலவாய் சென்ருர். மதுரைப் பெருமான் திருக்கோயில் வாயிலை அடைந்து, அங்கு கின்றபடியே யாழிற் சுருதி கூட்டிப் பல பாடல்களைப் பாடினர். அக்காலத்தில் பாணர்களேச் சற்றே இழிந்த குலத்தினர் என்று கருதி வந்தார்கள் ; ஆதலின் அவர் கோயில் வாயிலில் கின்று பாடினர்.

அவருடைய பக்தியிலும் பாடலிலும் ஈடுபட்ட ஆல வாய்ப் பெருமான், அன்று இரவு திருக்கோயில் பணி புரியும் தொண்டர்களுக்கும் பிற சிவனடியார்களுக்கும் கனவிலே தோன்றி, யாழ்ப்பாணரைக் கோயிலுள் அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைக்கும்படி கட்டளை யிட்டார். மறுநாள் விடிந்தவுடன் அடியார்கள் கூடித் திருநீலகண்ட யாழ்ப்பாணரிடம் வந்து இறைவன் திருக்குறிப்பைச் சொன்னர்கள். நாயனர் இறைவன் திருவருள் இருந்தவாறு என்னே என்று உருகி அவர்கள் பின் சென்று இறைவன் சங்கிதியை அடைந்தார்.

இறைவனைத் தரிசித்து என்றும் இல்லாத இன்பம் பெற்ருர். அப்பால் அங்கே அமர்ந்து யாழை மீட்டி இறைவன் இசை கூறும் பாடல்களே மெய்ம்மறந்து வாசிக் கத் தொடங்கினர்.

- அப்போது அசரீரி வாக்கு ஒன்று எழுந்தது. கீழே இருந்து பாணர் பாடினல் தரையின் ஈரத்தால் யாழின் நரம்புக் கட்டுக் குலேயுமாதலால் அவருக்குப் பலகை இட வேண்டுமென்று இறைவனுடைய அருளொலி கேட்டது. உடனே தொண்டர்கள் வியந்து அவ்வாறே காயனருக்கு ஓர் அழகிய பீடத்தை இட்டு அதன்மேல் அமர்ந்து பாடும்படி வேண்டினர்கள். யாழ்ப்பாணர் அதன்மேல் இருந்து உள்ளமுருக உடலுருக மிகமிக இனிமையாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/26&oldid=585766" இலிருந்து மீள்விக்கப்பட்டது