பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனுர் 19 குலத்தனிற் பிறப்பித் திட்டார் -

குறுக்கைவி ரட்ட ஞரே.' சிவத்தொண்டு புரிந்து விளங்கிய கோச்செங்கட் சோழன் திருத்தில்லை சென்று வணங்கிச் சிலகாள் அங்கே தங்கி அங்குள்ள மறையவர்களுக்கு மாளிகைகள் பலவற் றைக் கட்டி வழங்கினன். -

இந்தச் சோழனுடைய வீரத்தைப் பாராட்டிப் பொய்கையார் என்னும் புலவர் களவழி காற்பது என்ற நூலைப் பாடி யிருக்கிருர். அது பதினெண் கீழ்க்கணக்கு என்னும் நூல் வரிசையில் ஒன்ருகச் சேர்க்கப் பெற். றுள்ளது.

69. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனுர் -

திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதிகங்களே உடனுக் குடன் தம்முடைய யாழில் வாசிக்கும் பெரும்பேறு பெற் றவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். பழங்காலமுதல் வாய்ப் பாட்டிலும் இசைக் கருவிகளிலும் வல்லவர்களாக இருக் தவர்கள் பாணர்கள். அந்த மரபில் யாழ் வாசிக்கும் பேராற்றல் படைத்தவராக விளங்கினர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். விருத்தாசலத்துக்கு அருகில் உள்ள திரு எருக்கத்தம் புலியூர் என்னும் ஊரிற் பிறந்தவர். அவ்வூர் இப்போது இராசேந்திரப் பட்டணம் என்று வழங்குகிறது. இவருடைய மனேவியும் இசை பாடுவதில் வல்லவர். அவ ருக்கு மதங்க சூளாமணியார் என்பது பெயர்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் சிவபக்தி மிக்கவர். சிவ பெருமான் எழுந்தருளி யிருக்கும் திருப்பதிகளுக்குச் சென்று தரிசனம் செய்து, இறைவன் புகழைக் கூறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/25&oldid=585765" இலிருந்து மீள்விக்கப்பட்டது