பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நாயன்மார் கதை

திலே கிறுத்திக்கொண்டான். அமரர் தமக்கு வந்த இடை யூறு அகன்று அமுதம் கடைந்து உண்டனர்.

தன் போழகிளுலும், ஆலால நஞ்சை எடுத்துவந்த பெருமையாலும் ஆடியில் தோன்றிய அழகனுக்கு ஆலால சுந்தரன் என்ற திருநாமம் உண்டாயிற்று. அவன் சிவபிரானுடைய அணுக்கத் தொண்டகை, இறைவனுக்கு வேண்டிய மாலே, திருநீறு முதலியவற்றை எடுத்துச்சென்று வழங்கும் பணியைப் புரிந்து வந்தான்.

ஒருநாள் திருக்கயிலையில் உள்ள நந்தவனத்தில் தேவி கூந்தலில் அணியும் பொருட்டு, அன்னேயின் தோழி களாகிய அணிந்திதை கமலினி என்னும் இருவரும் பூக் கொய்து கொண்டிருந்தனர். அப்போது ஆலால சுந்தரன் அங்கே வந்து சேர்ந்தான். அவன் அங்கே மலர் கொய்து கொண்டிருந்த இருவரையும் கண்டான். அவன் உள் ளத்தே ஒரு கிளர்ச்சி தோன்ற அவ்விருவர்பாலும் தன் மனத்தைப் போக்கினன். அவனேக் கண்ட அவ்விரு மாதரும் அவனுடைய திருவுருவ எழிலக் கண்டு உள் ளத்தே இருத்தினர்.

ஆலால சுந்தரன் மலர்களைக் கொய்து சென்ருன். மங்கையர் இருவரும் அப்படியே மலர் கொய்து எடுத்துச் சென்று இறைவியை அடைந்தனர். சிவபெருமான் ஆலாலசுந்தரன் தன் உள்ளத்தை இரு மங்கையர்பால் போக்கிய செய்தியை உணர்ந்து கொண்டான். அவனே கோக்கி, "நீ இருவர்பாலும் காதல் கொண்டன. அந்தக் காதல் கனிந்து இன்பம் பெறவேண்டும்; அந்தச் செயல் நிலவுலகில்தான் நிகழவேண்டும். ஆதலின் நீ உலகில் பிறந்து, அந்த இருமங்கையரோடு ஒன்றி இன்புற்று வாழ்ந்து, பின்பு இங்கே வருவாயாக' என்று பணித்தான். அதுகேட்ட ஆலால சுந்தான் கைகளைக் கூப்பி, "எம்பெருமானே, தேவரீருடைய திருவடிக்கு அணுக்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/32&oldid=585772" இலிருந்து மீள்விக்கப்பட்டது