பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் 27

தொண்டு புரியும் பேறு அடியேனுக்குக் கிடைத்திருக் கிறது. இங்கிருந்து பிரிந்து உலகில் பிறவி எடுத்தால் கான் மயக்கமுற்று வருந்துவேனே அந்த மையல் மானிடப் பிறவியிலே என்னே வந்து தடுத்தாட் கொண் டருள வேண்டும்” என்று விண்ணப்பித்துக்கொண்டான். இறைவன் அப்படியே செய்வதாக அருளின்ை.

அன்று அங்கே கிகழ்ந்த இந்த அருட்செயலின் விளே வாக, மாதவம் செய்த தென்றிசை வாழ்ந்திடவும், இதிலாத், திருப்பதிகமாகிய தொண்டத்தொகை தோன்றவும், ஆலால சுந்தரன் திருகாவலூரில் ஆதிசைவ குடும்பத்தில் நம்பியாரூரராகத் தோன்றின்ை. கமலினி திருவா ரூரில் பரவை நாச்சியாராகவும், அனிந்திதை திருவொற்றி" யூரில் சங்கிலி நாச்சியாராகவும் தோன்றினர்.

வைதிகத் திருவும் மன்னவர் திருவும்

15டு காட்டில் திருமுனைப்பாடி நாடு என்பது ஒரு பகுதி. அந்த காட்டில் திருகாவலூர் என்னும் ஊரில் மாதொரு பாகனர்க்கு வழிவழி அடிமை செய்யும் ஆதிசைவர் குலத்தில் தோன்றிச் சிறப்புப் பெற்ருர் சடையனர் என்னும் பெரியார். அவருடைய மனைவியார் இசை ஞானியார். இருவருக்கும் குழந்தையாகத் திருவவதாரம் செய்தார் ஆலால சுந்தரர். அவருக்கு ஆரூரன் என்று திருகாமம் இட்டு அன்புடன் வளர்த்து வந்தனர்.

குழங்தை இனிது வளர்ந்து வந்தது. திருக்கோவலூரில் இருந்து திருமுனைப்பாடி காட்டை ஆண்டுவந்த நரசிங்க முனேயரையர் என்னும் ன்னர், அடிக்கடி திருகாவலூர் வந்து இறைவனைத் தரிசித்துக்கொண்டு செல்வார். ஆரூரர் பிள்ளைப் ரிாய விளையாடல்களைப் பயின்று வந்தார். சிற்றில் சிதைத்தும் சிறு தேருருட்டியும் விளையாடினர். ஒருநாள் தரிசனத்துக்கு வந்திருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/33&oldid=585773" இலிருந்து மீள்விக்கப்பட்டது