பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நாயன்மார் கதை

நரசிங்க முனயரையர் இந்தக் குழந்தையைக் கண்டார். அழகும் ஒளியும் மிக்க அந்தத் திருவுருவம் அவர் கண்ணே யும் கருத்தையும் சர்த்தது. அதுமுதல் அம்மன்னர் காவலுரர் வரும்போதெல்லாம் ஆரூாரைக் கண்டு எடுத்துத் தழுவி முத்தமிட்டுச் சீராட்டி இன்புறலாஞர். ஆரூாருக் கும் நரசிங்க முனையரையருக்கு மிடையே அன்பு முதிர்ந்து வந்தது. மன்னருக்கு ஆரூரரைத் தம்முடனே இருக்கச் செய்து பேணி வளர்த்துவர வேண்டுமென்ற ஆர்வம் உண்டாயிற்று. தம்முடைய கருத்தை மெல்லச் சடை யனருக்கும் இசை ஞானியாருக்கும் தெரிவித்தார். மன்னருடைய பேரார்வத்தைக் கண்டு அவர்கள் உடன் பட்டனர். உடனே நரசிங்க முனையரையர், அவரைத் தம் பிள்ளையாக ஏற்று அரசிளங்குமரனைப் போலவே வளர்த்து வந்தார்.

அந்தணருக்கேற்ற பண்பும் அரசருக்கேற்ற செல்வத் திருக்கோலமும் பெற்று ஆரூரர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தார். உரிய காலத்தில் அவருக்கு உபநயனம் செய்து கலைகளைக் கற்பிக்கலானர் மன்னர். அரசருக்கு ஏற்ற ஆனேயேற்றம் குதிரை யேற்றங்களைப் பழகினர் ஆலாலசுந்தார். ஆதி சைவருக்கு -ஏற்ப மறையும் ஆகமமும் பிற கலைகளும் பயின்ருர், அறிவிலே மிக்கு விளங்கித் தம்மைப் பெற்ருருக்கும் வளர்த்தவருக்கும் வியப்பையும் பெருமிதத்தையும் மகிழ்ச் சியையும் அளித்தார்.

அவருக்குத் திருமணம் செய்வதற்குரிய பருவம் வந்தது. சிறந்த குலப் பெண் ஒருத்தியைத் தேர்ந்து . மணம்புரிய வேண்டும் என்று சடையனர் முயன்ருர். அருகே உள்ள புத்துனர் என்ற ஊரில் சடங்கவி சிவா சாரியர் என்ற ஆதி சைவருடைய திருமகளேத் தேர்ந்து, அவளேச் சுந்தரருக்குரிய இல்லக் கிழத்தியாக ஏற்றுக் கொள்ள முடிவு செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/34&oldid=585774" இலிருந்து மீள்விக்கப்பட்டது