பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் 29.

நரசிங்க முனையரையர் இதனை அறிந்து மகிழ்ந்து, அரசர் திருவுக்கு ஏற்ற வகையில் திருமணத்தை கடத்த வேண்டுமென்று எண்ணி அதற்கு ஆவன புரிந்தார். முகூர்த்த காளேக் குறித்துத் திருமண ஒலேயும் போக்கினர்கள்.

இந்தத் திருமணத்தைக் கண்டு களிப்பதற்காகப் பல ஊர்களிலிருந்து மக்கள் திரண்டு வந்தனர். ஆடவரும் பெண்டிரும் வந்து மொய்த்தனர்.

தடுத்தாட் கொண்ட அருள்

திருமண காள் வந்தது. ஆரூரர் திருமஞ்சனம் செய்து கொண்டு ஆடை அணி அணிந்து திருமணக்கோலம் கொண்டார். யோகப் புரவியில் ஏறிக்கொண்டு. உறவினரும் பிறரும் சூழ மங்கல வாத்தியம் முழங்கத் திருகாவலூரிலிருந்து பெண் உள்ள ஊராகிய புத்துரருக்கு வந்தார். இந்தத் திருமண ஆரவாரத்தோடு பெருங் கூட்டம் புத் தாருக்கு வந்தமையால் அன்று முதல் அவ்வூருக்கு மணம் வந்த புத்துார் என்ற திருப்பெயர் வழங்கலாயிற்று.

புத்துரரில் உள்ளவர்கள் மாப்பிள்ளே வருவதை அறிந்து ஊரெல்லாம் அலங்கரித்திருந்தார்கள். நிறைகுடம், து.ாபம், தீபம், பாலிகைகள் ஆகியவற்றை ஏந்தினர்கள், மலரையும் அறுகையும் சுண்ணத்தையும் தூவினர்கள். பொரியை வீசினர்கள். சங்தனப் புனலத் தெளித்தார்கள். இவ்வாறு அந்தணுளர்கள், திருமணக் கூட்டத்தை எதிர் கொள்ள வந்தார்கள்.

சுந்தரர் மனப்பந்தருக்கு அருகில் வந்து இறங்கினர். அப்பொழுது இறைவன் அப்பெருமானைத் தடுத்தாட் கொள்வதாக அருளிய செயலே விகழ்த்தப் புக்கான். அவன் ஒரு கிழவேதியராகக் கோலம் பூண்டு எழுந்தருளி வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/35&oldid=585775" இலிருந்து மீள்விக்கப்பட்டது