பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நாயன்மார் கதை

திருமணப் பக்தருக்குள் புகுந்த அம்முதியவர், 'இங்குள்ள யாவரும் யான் சொல்லப் போவதைக் கேளுங்கள்” என்று சொன்னர். அங்கிருந்த அந்தணர் களும் சுந்தரரும் அந்த முதியவரை கோக்கி, 'தும் வரவு நல்வரவாகுக! நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கள்' என்றனர்.

அந்த முதியவர் காவலூர் கம்பியை நோக்கி, 'உனக்கும் நமக்குமிடையே ஒரு வழக்கிருக்கிறது. அதை முடித்த பிறகே நீ திருமணம் செய்யப் புகவேண்டும்" என்ருர், - 4.

'உமக்கு அப்படி ஒரு வழக்கு உண்டானல் அதை முடித்த பிறகே நான் திருமணம் செய்துகொள்வேன்; சொல்லுங்கள்' என்ருர் சுந்தரர்.

உடனே அந்தணர் சபையில் உள்ள அனைவரையும் கோக்கி, "இந்நாவலாரூரன் என்னுடைய அடிமை” என்று சொன்னர். அது கேட்டவர்கள், இவர் எதற்காக இப்படிப் பேசுகிருர் ?" என்று யோசித்தனர். "இது என்ன புதிய வழக்காக இருக்கிறதே!' என்று சிரித்தனர். சுந்தார், "இந்த அந்தணர் பேசுவது கன்ரு யிருக்கிறது!"

என்று கூறிச் சிரித்தார்.

அதுகண்ட முதியவர் தம் உத்தரீயத்தைத் தோள்மேல் போட்டுக் கொண்டு சுந்தரருக்கு முன் சென்று, 'என்ன சிரிக்கிருய்? இதோ பார்; உன் தந்தைக்கும் தந்தை எனக்கு எழுதித் தந்த அடிமை யோலே இது. இந்தச் செய்தியைக் கேட்டு நீ சிரிக்கிருயே!' என்று வெகுளிக் குறிப்புடன்

கேட்டார்.

'அந்தணர் ஒருவர் வேறு அந்தணருக்கு அடிமை .யாவது வழக்கம் இல்லையே! நீர் புதியதாகச் சொல்கிறீரே! இது வரையில் கேளாத அதிசயம் உம்முடைய வாயாவே :புதிதாகக் கேட்டோம். #+ பித்தனே?" என்ருர் சுந்தரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/36&oldid=585776" இலிருந்து மீள்விக்கப்பட்டது