பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் 31

"நான் பித்தனுகட்டும்; அல்லது பேயனே ஆகட்டும். அதைப்பற்றிக் கவலை இல்லை. நீ என்னே எவ்வளவு இழி வாகப் பேசினலும் நான் நாணம் அடைய மாட்டேன். என்னை உனக்குத் தெரியாவிட்டால், கின்று வித்தகம் பேசாதே எனக்குப் பணி செய்யவேண்டும்; அது அடிமையின் கடமை."

சுந்தரருக்கு யோசனை படர்ந்தது; "இவரைக் கண்டால் என் உள்ளம் அன்பு மீதுார உருகுகிறது. ஆனல் இவர் கூறும் பைத்தியக்கார வார்த்தையோ கோபத்தை எழச் செய்கிறது. அடிமை ஒலை இருக்கிற தென்கிருரே; அதையும் பார்த்து விடுவோம்’ என்று எண்ணி, "எங்கே, அந்த ஒலையைக் காட்டும்' என்ருர்.

அதைக் கேட்ட அந்தணர், "நீ ஒலையைப் பார்க்கும் தகுதி உடையவனவாயோ? சபைக்காரருக்குமுன் காட்டு வேன்! நீ ஆளாகப் பணி செய்யக் கடமைப் பட்டவன்’ என்ருர்.

அது கேட்ட ஆரூரருக்குக் கோபம் வந்து விட்டது. அவரிடம் இருந்த ஒலேயைப் பறிப்பதற்கு அவரைத் தொடர்ந்தார். முதியவர் திருமணப் பக்தரிலே ஒட, அவரைப் பின்பற்றிச் சென்ற சுந்தரர் அவரிடமிருந்த ஒலையை வலியப்பற்றி வாங்கி, 'அந்தணர் அடிமை யாவதாவது இது என்ன முறை?" என்று சொல்லி அவ் வோலேயைக்கிழித்து எறிந்தார். அதுகண்ட அவர், 'இது என்ன அரியாயம்' என்று முறையிட்டார்.

அருகில் இருந்தவர்கள் சுந்தரரை விலக்கி, முதியவரை நோக்கி,"ர்ே சொல்லுகிற முறை உலகில் எங்கும் இல்லாத சம்பிரதாயமாக இருக்கிறதே! இதை வைத்துக் கொண்டு வழக்கிடும் நீர் யார்? எங்கே இருக்கிறீர்? சொல்லும்" என்ருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/37&oldid=585777" இலிருந்து மீள்விக்கப்பட்டது