பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நாயன்மார் கதை

'நான் இங்கே இருப்பவன்தான். இதோ அருகில், இருக்கிற வெண்ணெய் கல்லூர்தான் என் ஊர். அது இருக்கட்டும். வலிய என் கையிலுள்ள ஆவண ஒலயை வாங்கி இவன் கிழித்தானே; இதுவே இவன் உண்மையை மாற்றுவதற்காகச் செய்த காரியம் அல்லவா? இதிலிருந்தே இவன் அடிமை யென்பதைக் காட்டிவிட்டான்' என்று முதியவர் கூறினர்.

ஆரூரர், இவர் யாரோ பழைய மன்ருடிபோல் இருக்கி முர்' என்று எண்ணினர். அவர் உள்ளத்தே அவரையும் அறியாமல் அன்பு பொங்கியது. 'நீர் வெண்ணெய், நல்லூர்க்காரரானல் இந்த வழக்கை அந்த ஊரில் தீர்த்துக் கொள்ளலாம்; வாரும்' என்ருர்.

"அப்படியே செய்யலாம். நீ வெண்ணெய் நல்லூருக்கு வந்தால், அவ்வூர்ச் சபையோாறிய நான்மறையோர் முன் என்னிடமுள்ள மூல ஓலேயைக் காட்டி நீ அடிமை என் பதை நிறுவுவேன். நீ கிழித்தது படியோலேதான்” என்று சொல்லித் தடியை ஊன்றிக் கொண்டு புறப்பட்டார்.

அந்த மறையவர் பின்னே காந்தத்தைச் சார்ந்து இரும்பு செல்லுவதைப்போல ஆரூரர் சென்ருர். சுற்றத் தினரும், 'இது என்ன வியப்பா யிருக்கிறது!’ என்று அவருடன் சென்றனர். யாவரும் வெண்ணெய் நல்லூரை அணுகி அங்குள்ள சபையை அடைந்தார்கள். அக்காலத் தில் ஊருக்கு ஊர் நல்லவர்களும் பெரியவர்களும் சேர்ந்த சபை ஒன்று இருக்கும். ஊருக்குப் பொதுவான காரியங் களே அச்சபையினர் கவனித்து கடத்துவார்கள். ஊரில் ஏதேனும் வழக்கு எழுந்ததால்ை சபையினர் அதை விசாரித்து முடிவு செய்வார்கள்.

வெண்ணெய் நல்லூர்ச் சபையில் இருந்த நான்மறை யோர் முன் கின்று முதிய அந்தணர், "இந்த நாவலாரூரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/38&oldid=585778" இலிருந்து மீள்விக்கப்பட்டது