பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் 33

என் அடிமை. அதற்குச் சான்முக நான் காட்டிய ஒலயை இவன் கிழித்தெறிந்து விட்டான். இதோ வந்திருக்கிருன். இது என் முறைப்பாடு' என்ருர்.

அவையிலிருந்த பெரியவர்கள் அதைக் கேட்டு, "என்ன ஐயா, புதிய வழக்கைச் சொல்கிறீரே. இந்த மாநிலத்தில் அந்தணர் அடிமையாதல் இல்லையே' என்றனர்.

'இது பரம்பரையாக இசைந்து வந்த வழக்கம் அல்லவோ? இவன் கிழித்த ஒலே இவன் தங்கைக்குத் தங்கை எனக்கு எழுதிக் கொடுத்தது” என்ருர்.

உடனே அவையினர் சுங்தாரை நோக்கி, "மனம் இசைந்து எழுதிய ஒலையை இவர் காட்டினரானல், அதை வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றி யாகுமா? இந்தத் தளர்ந்த வேதியர் தம்முடைய வழக்கைச் சொன்னர், உம்முடைய எண்ணம் யாது?’ என்று கேட்டனர்.

"எல்லா நூல்களேயும் உணர்ந்த பெரியவர்களே, நான் ஆதி சைவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். என்கினத் தமக்கு அடிமை என்று இவர் சாதிக்கிருர். இது மனத்தினல் அறிவதற்கரிய மாயையாக அல்லவா இருக் கிறது? நான் என்ன சொல்லட்டும்? எனக்கு இன்ன தென்றே விளங்கவில்லை" என்ருர் சுந்தரர்.

அவையினர் அந்தணர் பெருமான நோக்கி, 'இவர் உம்முடைய அடிமை என்பதை எம்முன் சான்றுடன் நிறுவவேண்டும். ஆட்சியோ ஆவணமோ பிறர் கண்ட காட்சியோ இந்த மூன்றில் ஒன்று காட்டுவீராக” என்று கூற, அவர், 'முன்னே இவன் கிழித்த ஒலே படியெடுத்த ஒல; அதற்கு மூலமாகிய ஒலே என்னிடம் வைத்திருக்கின் றேன்" என்ருர். "அப்படியாளுல் அதைக் காட்டுக" என்று சபையினர் சொல்ல, "நான் காட்டுவேன்; ஆளுல்

Аи, и —-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/39&oldid=585779" இலிருந்து மீள்விக்கப்பட்டது