பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் 35

சுந்தரர், "நீதிமுறை இதுவானல் நான் இதற்கு இசையமாட்டேன் என்று சொல்ல முடியுமோ?' என்று சொல்லி யின்ருர்,

அப்போது அவையினர் முதுமறையவரை கோக்கி, 'அந்தணர் பெருமானே, நீர் காட்டிய ஆவணத்தில் உமக்கு எங்கள் ஊர் என்று இருக்கிறதே! உம்முடைய வீடு இங்கே எங்கிருக்கிறது? எவ்வளவு காலமாக வாழ்கிறீர்?" என்று கேட்டனர்.

வழக்கில் வெற்றி பெற்ற புண்ணிய முனிவர்,"என்னே ஒருவரும் அறிந்திலிரோ? அப்படியானல் என்னுடன் வாரும்” என்று கூறி, அவையிலுள்ள மறையவர்களும், கம்பி ஆரூரரும் பின் தொடந்து செல்ல, முன் கடந்தார். திரு வெண்ணெய் கல்லூரிலுள்ள திருக்கோயிலாகிய திருவருட் டுறைக்குள் புகுந்தவர் மறைந்தார். பின் வந்தவர்கள் அவரைக் காணுமல் திகைத்தனர். :

'பெரியவர் இந்தக் கோயிலில் புக்கது ஏன்?" என்று எண்ணிய சுந்தரர், தனியே திருவருட்டுறைக்குள் புகுந்து அழைக்க, இறைவன் இடபவாகனருடனுய்த் தோன்றி, ‘'நீ நம்முடைய தொண்டன். நம்முடைய ஏவலாலே உல கில் பிறந்தாய். நாம் வாக்களித்தபடி இங்கே வந்து உன்னைத் தடுத்தாட் கொண்டோம்” என்று திருவாய் மலர்க் தருளின்ை.

இதனேக் கேட்ட கம்பி ஆரூரர் தாய்ப்பசுவின் கணேப் பைக் கேட்ட கன்றைப் போலக் கதறித் தலைமேல் கைகுவித்து ஆடினர் பாடினர்: "எம்பெருமான் என்ன வலிய ஆட்கொண்ட பேரருள்தான் என்னே!" என்று விம்மினர். அப்போது இறைவன், 'நீ என்னிடம் வன்மை யாகப் பேசினமையின் உனக்கு வன்ருெண்டன் என்னும் பெயர் அமைவதாகுக. நமக்கு விருப்பமான அருச்சனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/41&oldid=585781" இலிருந்து மீள்விக்கப்பட்டது