பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தாயன்மார் கதை

பாட்டே ஆகும்; ஆதலால் தமிழ்ப் பாக்களால் கம்மைப் பாடுக” என்று பணித்தான். சுந்தரர் தொழுதபடியே, :வேதியணுகி வந்து வழக்கினல் வென்று ஆட்கொண்ட ஆரமுதே, குணப்பெருங்கடலே, உன்னிடம் எதை அறிந்து எப்படிப் பாடுவேன்!" என்று உருகினர். இறை வன், 'முன்பு நம்மைப் பித்தன் என்று மொழிந்தாய் ஆதலின், பித்தனேன்றே எடுத்துப் பாடுவாயாக’ என்று அருளினன்.

அந்த அருளே துணையாக வன்ருெண்டர், "பித்தா பிறை குடி' என்று எடுத்துத் தேவாரப் பதிகத்தைப் பாடலானர்.

திருத்தில்லைக் காட்சி இறைவன் எல்லா உயிர்களுக்கும் தாயாக இருக் கிருன். அவ்வுயிர்கள் வாழ வேண்டிய கருவிகளேப் படைத்திருக்கிருன். அவனே காம் மறந்தாலும் நம்மை அவன் மறப்பதில்லை. நமக்கு அவனிடம் அன்பு இருக் கிறதோ இல்லையோ கம்பால் அவனுக்கு உள்ள அருளுக்கு அளவே இல்லே. தாய்க்குக் குழந்தைகளிடத்தில் பெருங் கருணே இருக்கிறது. ஆனல் குழந்தைகள் வளர்ந்த பிறகு அன்னேயிடம் அன்புடையவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல இயலாது. சில சமயங்களில் மிடுக்குடைய மக்கள் தாயைப் புறக்கணிப்பதும் உண்டு. அப்பொழுதும் தாய்க் குப் பிள்ளைப் பாசம் விடுவதில்லை. இதனே எண்ணியே, "பெற்ற மனம் பித்து; பிள்ளே மனம் கல்லு" என்ற பழ மொழி எழுந்தது.

இறைவன் கருணையே வடிவானவன். அவனுடைய போருளுக்கு இணையே இல்லை. மக்களுடைய கெஞ் சமோ கல்லாக இருக்கிறது. அதனை அறிந்தும் இறைவன் உயிர்கள் வாழ வகை செய்துகொண்டே இருக்கிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/42&oldid=585782" இலிருந்து மீள்விக்கப்பட்டது