பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் 3?

பிள்ளைகளின் மனம் கல்லாக இருந்தாலும் இறை வனுடைய அருளுள்ளம் அவர்கள் பால் பித்துடையதாக இருக்கிறது.

இவற்றை யெல்லாம் எண்ணியே நாவலாரூரராகிய சுந்தரர் "பித்தா” என்று திருப்பதிகத்தைத்தொடங்கினர்.

பித்தாபிறை சூடிபெரு மானே அரு ளாளா எத்தான்மற வாதேதினேக் கின்றேன்மனத் துன்னே வைத்தாய் பெண்ணேத் தென்பால் வெண்ணெய்

நல்லூரருட் டுறையுள் அத்தாஉனக் காளாய் இனி அல்லேன் என லாமே!

இறைவனைப் பித்தா என்ருர், அதனே விளக்குபவர் போலப் பிறை குடி என்ருர். சந்திரன் தக்கயாகத்தில் இறைவனுடைய திருவடியால் தேய்க்கப் பெற்றவன். காலடியில் பட்ட பொருளேத் தலையில் தூக்கிவைத்துக் கொள்பவன் பித்தன் அல்லவா? ஆனல் பெருமான் தலே வன்; பெரியவன். அப்படித் தலையில் எடுத்து அணிந்த தற்குக் காரணம் அவனுடைய அருள்தான். அருளாளன கிய அவன் இப்போது, "நான் அடிமை அல்ல' என்று மறுத்தும் வலியத் தடுத்தாட் கொண்டான். இப்போது சுந்தரர் அவனே மறக்கவில்லை. முன்பு மறந்தார். இனி எதலுைம் மறக்கமாட்டார்.

எத்தால் மற வாதேநினைக் கின்றேன்! (எதனுலும் உன்னை மறவாமல் நினைக்கின்றேன்.)

சுந்தரர், "கினேக்கின்றேன்” என்று சொன்னவர் அப் படிச் சொல்வது தவறு என்று எண்ணினர். உடனே, 'காளுவது, கினேப்பதாவது! நான் கினைத்த அழகுதான் தெரிந்திருக்கிறதே! இறைவனே திருவருளாலே தன்னை என் மனத்தில் கினைக்கும்படி வந்து இருந்தான். அவன் என் மனத்தில் தன்னே வைத்து வினைக்கச் செய்வதனல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/43&oldid=585783" இலிருந்து மீள்விக்கப்பட்டது