பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தாயன்மார் கதை :

வினைக்கின்றேன். இல்லையானுல் அவனே நினைக்கவேண்டும் என்று எளியேனுக்குத் தோன்றுமோ, தோன்ருதோ?” என்ற எண்ணத்தினால்,

மனத்து உன்னை வைத்தாய் என்ருர்.

திருவெண்ணெய் கல்லூர் பெண் அணயாற்றங் கரை யில் இருப்பது. ஆலயத்துக்கு அருட்டுறை என்று பெயர். வெண்ணெய் நல்லூர் அருட்டுறையில் அத்த்ர். இத்தகைய பெருமானுக்கு அகாதி காலமாக ஆளாக இருப்பவர் சுந்தார். அந்த உறவை மாற்றி, பிணேப்பை மூறித்து, "கான் அடிமை அல்ல” என்று சொல்வது முறையா? அதுதானே பேதைமை? பைத்தியக்காரத்தனம்?

அத்தாஉனக் காளாய்,இனி அல்லேன் என லாமே?

திருப்பதிகம் முழுவதையும் பாடியருளினர் சுந்தார். அப்போது இறைவன் அசரீரியாக, "இப்படியே உலகில் பல வேறு தலங்களில் உள்ள கம் புகழைப் பாடுவாயாக!" என்று அருளிச் செய்தான். சுந்தரர் திருகாவலூர் சென்று எம்பெருமானே வணங்கித் திருப்பதிகம் பாடினர்.

சுந்தரரை மணக்க இருந்த பெண், பின்பு கன்னி யாகவே இருந்து அவரையே தியானம் செய்து வாழ்ந்து சிவலோக பதவியை அடைந்தாள்.

இறைவன் புகழ்பாடும் கடமையை மேற்கொண்ட சுந்தரர், திருத்துறையூர் சென்று பதிகம் பாடி அப்பால் வேறு சில தலங்களை வழிபட்டார். தில்லை சென்று கடம் புரியும் பெருமானே வணங்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்பால் எழுந்தது. பெண்ணேயாற்றைக் கடந்து திரு வதிகைப் புறத்தே அணைந்தார். உழவாரப் படையாளி யாகிய திருநாவுக்கரசர் பலகாலம் வாழ்ந்து திருத்தொண்டு புரிந்த அத் திருப்பதியைத் தம் காலால் மிதிக்கக்கூடாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/44&oldid=585784" இலிருந்து மீள்விக்கப்பட்டது