பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுக் 39

என்று அருகிலுள்ள சித்தவடமடம் என்ற இடம் சென்று திருவதிகைப் பெருமான எண்ணியபடியே படுத்திருந்தார். அப்போது சிவபெருமான் ஒரு முதிய வேதியராக எழுங் தருளிச் சுந்தரர் தங்கிய மடத்துக்குட் புகுந்து பள்ளி கொண்டான். சுந்தரர் தலையின்மேல் தன் திருவடி படும்படி படுத்திருந்தான். அப்போது சுந்தரர், 'ஐயா, உம்முடைய அடியை என் தலையில் வைக்கிறீரே!” என்று சொன்னர். பெருமான், "திசையறியாத மயக்கம் என்னுடைய முதுமைப் பிராயத்தால் வந்துவிட்டது” என்று சொன்னன். உடனே சுந்தரர் வேறு பக்கமாகத் தலையை வைத்துப் படுத்தார். அப்போதும் அம்மறையவன் தலையின்மேல் கால் படும்படி படுத்திருக்கச் சுந்தார், "இது என்ன? நான் எப்படிப் படுத்தாலும் என் தலைமேல் கால வைக்கிறீரே! ர்ே யார்?' என்று கேட்டார். அப்போது இறைவன், "என்னை நீ அறிந்திலேயோ!' என்று சொல்லி மறைக் தருளினன்.

வந்த மறையவர் இறைவனே என்று அறிந்து மனம் உருகினர் ஆரூரர். உடனே திருவீரட்டானப் பெருமானே, “தம்மானை அறியாத சாதியார் உளரே' என்று தொடங்கி ஒரு திருப்பதிகம் பாடினர்.

பிறகு கெடில நதியில் ரோடி திருமாணிகுழியைத் தரிசித்துக்கொண்டு, திருத்தினோகர் சென்று வழிபட்டுத் திருப்பதிகம் பாடித் திருத்தில்லே கோக்கிச் சென்ருர். இசைக் கருவிகளின் கீத ஒலியும் வேத ஒலியும் இடையருது ஒலிக்கும் தில்லையின் மருங்கே அணைந்தார். அப்பெரும்பதி யின் எல்லையை வணங்கி வடக்குத் திருவாயிலின் வழியே உள்ளே புகுந்தார். அவருடைய வருகையை அறிந்த தில்லைவாழ் அந்தணர்கள் அவரை எதிர்கொண்டு பணிந்து அழைத்துச் சென்றனர். சுந்தரரும் அவர்களைப் பணிந்து அம்பலவாணனே வணங்கும் பெருவிருப்பத்தோடு திருவீதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/45&oldid=585785" இலிருந்து மீள்விக்கப்பட்டது