பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நாயன்மார் கதை

யிலே புகுந்தார். வீதிவலம் வந்து திருக்கோயிலுள் புக்குத் திருச்சிற்றம்பலத்தை அடைந்து கடராசப் பெருமானே வணங்கினர்.

அப்போது அவர் அடைந்த பேரின்பத்தை என்ன வென்று சொல்வது! அவருடைய ஏனைய புலன்கள் உணர் விழந்து போகக் கண்கள் மட்டும் ஆடும்பெருமான் திருக் கோலத்தில் ஒன்றிவிட்டன. அந்தக்கரணங்கள் நான் கினுள் ஏனையவை ஒடுங்கி கிற்க, சித்தம் ஒன்றுமட்டும் எம்பெருமான் தியானத்தில் தனிகின்று ஒன்றியது. சத்துவகுணம் மேலோங்கி கிற்க, மற்றவை அடங்கின. இந்த கிலேயில் கின்ருர் அவர். இறைவன் திருக்கூத்துத் தரிசனம் அவருக்குக் கண்ணின் வழியே பேரானந்தக் கடலைப் புகுத்தியது. இந்த கிலேயைச் சேக்கிழார் பெருமான் மிக அருமையாகப் பாடுகிரு.ர்.

" ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள

அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும் திருந்துசாத் துவிகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடும்ஆ னந்த

எல்லேயில் தனிப்பெருங் கூத்தின் வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து

மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.' "இந்தத் திவ்யதரிசனம் பெறக்கிடைத்த இப்பிறவியே தாய பிறப்பு” என்று சுந்தரர் உருகினர். திருப்பதிகம் பாடி ஞர். அப்போது வானில், 'ஆளுருக்கு வருவாயாக" என்று ஒர் ஒலி எழுந்தது.

திருமணமும் தொண்டத்தொகை உதயமும்

"திருவாரூருக்கு வருக" என்ற ஒலியைக் கேட்டு இறைவனே இறைஞ்சித் தில்லையை விட்டுப் புறப்பட்டார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/46&oldid=585786" இலிருந்து மீள்விக்கப்பட்டது