பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் 41

சுந்தரர். தென்றிசை வாயில் வழியே புறம்போக்து கொள்ளிட கதியைக் கடந்து சீகாழியை அணுகினர். அது திருஞான சம்பந்தப் பெருமான் திருவவதாரம் செய்த தலமாதலின், அதனுள்ளே மிதிக்கக் கூடாது என்று புறத்தே கின்று வணங்கினர். அப்போது பிரமபுரீசர் அவருக்குக் காட்சி கொடுத்தருளினர். அங்கே திருப்பதிகம் பாடித் திருக்கோலக்கா, திருப்புன்கூர் , மயிலாடுதுறை, அம்பர் மாகாளம், திருப்புகலூர் முதலிய தலங்களே யெல்லாம் தரிசித்துக் கொண்டு திருவாரூரை அடைந்தார்.

"நாம் அழைக்க நம்பி ஆரூரன் இங்கே வருகின்ருன். அவனே எதிர்கொள்வீர்களாக’ என்று திருவாரூரிலுள்ளா ருக்கு எம்பெருமான் கனவில் அறிவித்தருளினன். 'சிவ பெருமானுடைய அருள்பெற்ற ஆரூரர் நமக்குத் தலைவர்” என்ற அன்பு மீதுார, அவரை வரவேற்பதற்கு ஏற்ற வகை யில் அவ்வூரினர் நகரை அலங்கரிக்கலாயினர். மாளிகை களிலும் மண்டபங்களிலும் பெருங் கொடிகளே காட்டினர். தோரணங்களேக் கட்டினர். கமுகும் வாழையும் கட்டனர். கிறை குடமும் விளக்குகளும் வைத்தனர். திண்ணைகளே மெழுகிச் சுண்ணமும் முத்தும் பரப்பிக் கோலம் இழைத்து மாலைகளே வரிசை வரிசையாகத் தொங்க விட்டனர். அங்கங்கே பக்தர்களே அமைத்தனர். வீதிகளில் பணிநீர் தெளித்தனர்.

மங்கலக் கருவிகள் முழங்கப் பாடல்கள் ஒலிக்க அணங்கினர் கடம்பயில எங்கும் ஒரே மகிழ்ச்சி ஆரவாரம் மிக்கது. அடியார்கள் குழுமித் திரண்டு நகரத்தின் வாயி வில் நாவலாரூரரை எதிர்நோக்கி நின்றிருந்தார்கள்.

சுந்தரமூர்த்தி காயனர் வந்தவுடன் அவரை யாவரும் வணங்க, அவர் அஞ்சலி கூப்பித் திருவீதியூடே செல்ல லானர். போகும்போது, "எங்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோகேளிர்”எனவரும் திருப்பதிகத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/47&oldid=585787" இலிருந்து மீள்விக்கப்பட்டது