பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நாயன்மார் கதை

பாடினர். திருக்கோயில் சென்று திருவாயிலில் வணங்கிப் புகுந்து புற்றிடங் கொண்ட பெருமான் சங்கிதியிலே சென்று வழிபட்டார். அவருடைய உள்ளம் இன்பத்தால் கிறைந்து பொங்கியது. திருப்பதிகம் பாடினர். அப்போது வானில் ஓரொலி எழுந்தது. “காம் உனக்குத் தோழரா ளுேம். நீ காம் தடுத்தாட்கொண்டபோது கொண்டிருந்த திருமணக் கோலத்தைப் புனேந்து எப்போதும் மகிழ்ச்சி யோடு இருப்பாயாக’ என்று இறைவன் அருளிச் செய் தான். அதனைக் கேட்ட வன்ருெண்டர், "எம்பெருமானே! உன் கருணை இருந்தவாறு என்னே' என்று உருகிப் பல முறை வணங்கிப் பின்பு வீதிவிடங்கராகிய தியாகராசர் சங்கிதி சென்று வணங்கினர். அதுமுதல் திருவாரூரே பதியாக வாழலானர். அவருக்குத் தம்பிரான் தோழர் என்ற புதிய பெயரும் அமைந்தது.

இந்தத் திருவவதாரத்துக்கு முன்புள்ள மூல மூர்த்திக் குரிய திருகாமம் ஆலால சுங்தார்; அதனேக் கருதியே சுந்தரர், சுந்தரமூர்த்தி என்று அப்பெருமானே வழங்கினர். தாய் தந்தையர் வைத்த பிள்ளைத் திருகாமம் ஆரூரன் என்பது. திருநாவலூரில் பிறந்தமையால் காவல் ஆரூார் என்றும், காவலர் கோமான் என்றும், ஆதிசைவராதலின் நம்பியாரூரர் என்றும் பெயர் பெற்ற இவர், தம்மை ஊரன் என்றும் சொல்லிக் கொள்வார். இறைவன் அளித்த வன்ருெண்டர், தம்பிரான் தோழர் என்ற திருநாமங்களும் இவருக்கு அமைந்தன.

காள்தோறும் சுந்தரமூர்த்தியார் இறைவன் திருக் கோயில் சென்று புற்றிடங் கொண்டாரை வழிபட்டு அவ் வப்போது தமிழ் மாலேகள் சாத்தி வந்தார்.

திருக்கயிலாயத்தில் இருந்த கமலினி என்னும் அணங்கு, திருவாரூரில் பதியிலாராகிய உருத்திர கணிகை யர் குலத்தில் பிறந்து பரவையார் என்னும் நாமம் பெற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/48&oldid=585788" இலிருந்து மீள்விக்கப்பட்டது