பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் 43.

வளர்ந்து வந்தார். எம்பெருமானுடைய திருக்கோயில் தொண்டு செய்துகொண்டு சிவபக்தியிற் சிறந்து விளங்கினர்.

ஒருநாள் சுந்தரர் அப் பெருமாட்டியைத் திருக் கோயிலிற் கண்டார். அவருடைய அழகு நாயனருடைய உள்ளத்தை ஈர்த்தது. இறைவனிடம் ஈடுபட்ட தம் உள்ளத்தை இழுக்கும் அம்மட மங்கையார் இறைவன் திருவருளால்தான் தம் பார்வைக்கு இலக்கானர் என்று அவர் கினேத்தார். அப்படியே, யாரையும் ஏறிட்டுப் பாராத பண்புடைய பரவையாரும் சுங்தாரைக் கண்டு அவர் மேல் மனம் போக்கினர்.

இதனே உணர்ந்த சிவபெருமான் திருவாரூரில் உள்ள அடியவர்களது கனவில் தோன்றி, "சுந்தரனுக்கும் பரவைக்கும் திருமணம் செய்து வையுங்கள்’’ என்று அருளினன். அவர்கள் அவ்வாறே மிகச் சிறப்பாகத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

அது முதல் சுந்தரர் தம் வாழ்க்கைத் துணையாகிய பரவையாருடன் ஒன்றி, அறமும் அடியார் வழிபாடும் சிவநெறி படரும் யோகமும் இணைந்து கடத்துவாராயினர்.

ஒருங்ாள் திருக்கோயிலுக்குள்ளே சுந்தரர் புகுந்தார். திருத்தொண்டர்கள் குழுமியிருக்கும் தேவாசிரயன் என் னும் மண்டபத்தைக் கடந்து செல்லும்போது, "இந்தப் பெரியவர்களுக்கு அடியனுகும் பேறு எப்போது கிடைக் குமோ!' என்ற எண்ணம் உதயமாயிற்று. இறைவன் திரு முன்சென்று வணங்கினர். அப்போது இறைவன் அடியார் களுடைய பிலேகளே அவர் உணரும்படி அருளினன். பின்பு, 'நீ தொண்டர்களேப் பாடுவாயாக’ என்று பணித்தான். அப்போது தம்பிரான் தோழர், ‘எம்பெருமானே, இன்ன வாறு பாடவேண்டு மென்னும் நெறியறியாத எளியேனுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/49&oldid=585789" இலிருந்து மீள்விக்கப்பட்டது