பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நாயன்மார் கதை

குப் பாடும் பரிசை அருளவேண்டும்" என்று வேண்ட, இறைவன், “தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடி யேன்” என்று திருப்பதிகத்தின் முதலே எடுத்துக் கொடுத் தருளினன். அது கேட்டு மகிழ்ந்து இறைவனே வணங்கித் தேவாசிரயன அடைந்து, அங்குள்ள தொண்டர்களேத் தூரத்திருந்து தொழுது, அருகு சென்று எம்பெருமான் எடுத்துக் கொடுத்ததை முதலாக வைத்துத் திருத் தொண்டத் தொகை என்னும் திருப்பதிகத்தை அருளினர். அதைப் பாடி மீட்டும் அடியார்களே வணங்கினர். - அப்போது அவர் பாடிய திருத்தொண்டத் தொகையே பின்பு சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்கு வித்தாக அமைந்தது. இதனைச் சேக்கிழார் பெரிய புராணத்தில் சொல்கிரு.ர்.

'உம்பர்நாயகர்.அடியார் பேருவகை தாம் எய்த

நம்பியா ரூரர்திருக் கூட்டத்தின் நடுவணந்தார்; தம்பிரான் தோழரவர் தாம்மொழிந்த தமிழ்முறையே எம்பிரான் தமர்கள் திருத் தொண்டேத்த லுறுகின்றேன்."

நெல்லும் பொன்னும் சுந்தரமூர்த்தி காயனர் திருவாரூரில் இருந்து எம்பெரு மானே வழிபட்டு இனிது வாழ்ந்திருந்தார். குண்டையூர் என்னும் ஊரில் இருந்த வேளாளர் ஒருவர் அவருக்கு வேண்டிய நெல், பருப்பு, வெல்லம் முதலியவற்றைப் பரவையார் திருமாளிகையிற் கொண்டு வந்து சேர்த்து வந்தார். அம்மாளிகையில் இடையருமல் தொண்டர் கூட்டத்துக்கு விருந்தளித்து வழிபடும் அறம் கடந்து கொண்டே இருந்தது.

மழையின்மையால் கிலத்தில் விளைவு குன்றவே, போதிய அளவு கெல் முதலியவற்றைப் பரவையார் திருமாளிகைக்கு அனுப்ப முடியாத கிலே வந்தது. அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/50&oldid=585790" இலிருந்து மீள்விக்கப்பட்டது