பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் 45.

கினேந்து வருந்திய குண்டையூர் கிழார் துயிலும்போது, அவர் கனவில் இறைவன் எழுந்தருளி, 'ஆரூரனுக்காக உன்பால் நெல் தந்தோம்” என்று கூறி மறைந்தான். விடிந்தவுடன் அவர் எழுந்து பார்க்கும்போது தம்முடைய வீட்டைச் சுற்றிலும் ஊர் முழுதும் நெல் மலைபோலக் குவிந்திருப்பதைக் கண்டார். சுந்தரமூர்த்தி நாயனரின் பெருமையை எண்ணி வியந்தார். அத்தனை நெல்லேயும் திருவாரூருக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கக் கணக்கற்ற ஆட்கள் வேண்டுமே! என் செய்வது?

குண்டையூர் கிழார் திருவாரூர் சென்று நம்பியா ரூரரிடம் நெல்மலை குவிந்துள்ள செய்தியைச் சொல்லி, அவற்றை எடுத்துவரப் போதிய ஆள் இன்மையையும் சொன்னர். சுந்தரர் குண்டையூர் சென்று நெற்குவியல் களைக் கண்டு, "இறைவன் உம்முடைய வேண்டுகோளுக் காகவே வழங்கி யிருக்கிருன்' என்று குண்டையூர் கிழா ரைப் பாராட்டினர். அப்பால் ஒரு திருப்பதிகம் பாடி, “இறைவனே, இந்த நெல்லைத் திருவாரூருக்கு எடுத்துச் செல்ல ஆள் இல்லை; எப்படியாவது இதனே அங்கே சேர்ப் பித்தருள வேண்டும்" என்று வேண்டினர்.

அன்று இரவே பூதகணங்களே அனுப்பி அந்த நெல் முழுவதையும் திருவாரூருக்குக் கொண்டு சேர்க்கச் செய்தான் எம்பெருமான். காலேயில் எழுந்து பார்க்கும் போது பரவையார் திருமாளிகை முன்றிலில் கெல் மலே குவிந்திருந்தது. வீதியெல்லாம் கெற்குவியல். ஊர் முழுதும் நெற்குன்றங்கள். இறைவன் திருவருட் பெருமையைச் சிந்தித்து வந்தித்த பரவையார், தம்முடைய வீட்டில் நிரம்பு மளவுக்கு கெல்லச் சேமித்தார். அங்கங்கே இருந்த நெல்லே அருகிலுள்ள வீட்டுக்காரர்கள் எடுத்துக் கொள்ள லாம் என்று முரசறையச் செய்தார். இந்த அருட்செய லால் ஆரூரில் உள்ளார் அனைவரும் பயன் பெற்ருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/51&oldid=585791" இலிருந்து மீள்விக்கப்பட்டது