பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நாயன்மார் கதை

ஒரு நாள் சுந்தரர் திருகாட்டியத்தான் குடி என்ற தலத்தை அடைந்தார். அங்கே சோழனுடைய சேனபதி யாகிய கோட்புலி நாயனர் வாழ்ந்து வந்தார். அவர் சுந்தரரை எதிர் கொண்டழைக்க, அவர் திருமாளிகைக்குச் சென்ருர். கோட்புலியார் சுந்தாருக்குச் சிறப்பு செய்து வழிபட்டார். தம்முடைய பெண்களாகிய சிங்கடி, வனப் பகை என்னும் இருவரையும் அவர் திருவடியில் விழச் செய்து, "இவர்களே அடிமைகளாக ஏற்றருள வேண்டும்' என்று வேண்டினர். கம்பியாரூரர், "இவர்கள் என் புதல்வியராகி விட்டார்கள்' என்று சொல்லி அவர்களே உச்சி மோந்து அன்பு செய்தார். இறைவன் திருக்கோயில் சென்று பதிகம் பாடி அதில் தம்மைச் சிங்கடியப்பன் என்று சொல்லிக் கொண்டார்.

திருவாரூரில் இருந்தபோது, பங்குனி உத்தரத் திருவிழா நெருங்கியது. பல ஊர்களிலிருந்து சிவனடியார் கள் வந்து கூடும் விழா அது. பரவையார் மாளிகையில் ஆயிரக்கணக்கான அடியவர்களுக்கு அமுதுrட்டி உபசரிப் பார்கள். அதற்குப் பொன் வேண்டும் என்ற எண்ணத் தோடு சுந்தரர் திருப்புகலுாரை அடைந்தார். இறைவனே வழிபட்டுத் திருக்கோயிலில் அமர்ந்திருந்தபோது சற்றே அயர்ச்சியாக இருந்தமையால், திருப்பணிக்காக வந்திருந்த செங்கற்களை எடுத்துத் தலைக்கு உயரமாக வைத்து உத்த ரீயத்தை விரித்துப் படுத்துத் துயின்ருர். துயில் நீங்கி எழுந்து பார்க்கையில் தலைமாட்டில் இருந்த அத்தனே செங் கற்களும் பொன்கற்களாக மாறியிருப்பதைக் கண்டு சிவ பெருமான் திருவருளே வாழ்த்தினர். "தம்மையே புகழ்ந்து" என்ற திருப்பதிகம் பாடிப் போற்றினர். அந்தப் பொற் குவையை ஆரூருக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பித்தார். பங்குனி உத்தரவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பிறகு கம்பியாரூரர் பல தலங்களே வழிபட்டுப் பதிகம் பாடித் திருவாலம் பொழில் என்ற திருப்பதியில் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/52&oldid=585792" இலிருந்து மீள்விக்கப்பட்டது