பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி நாயனுர் 47 தங்கினர். அப்போது கனவில் எம்பெருமான் எழுந்தருளி, "மழபாடிக்கு வர மறந்தனையோ?" என்று கேட்டான். துயிலுணர்ந்த காயனர் இறைவன் அருட்கட்டளையை ஏற்றுத் திருமழபாடி சென்று, அங்குள்ள வச்சிரத் தம்பேசு வரரை வணங்கிப் பதிகம் பாடினர்.

அப்பால் வேறு சில தலங்களுக்குச் சென்று பணிந்து திருப்பாச்சிலாச்சிராமத்தை அடைந்தார். இறைவனே வணங்கித் தமக்குப் பொருள் வேண்டும் என்பதைக் குறிப் பிக்க, பெருமான் ஒன்றும் வழங்காமல் இருந்தான். அது கண்டு, தம்பிரான் தோழர் என்ற கட்புரிமையை மேற் கொண்டு, 'இவரலாது இல்லையோ பிரானுர்?" என்று கேட்டு ஒரு திருப்பதிகம் பாடினர். இறைவன் விழுகி,திக் குவை அளித்தருளவே, சில நாட்கள் அப்பதியில் தங்கினர்.

அவ்வூரை விட்டு அவர் சிவத்தலங்கள் பலவற்றிற் குச் சென்று வழிபட்டுக் கூடலேயாற்றுார் என்ற தலத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது இறைவன் ஒர் அந்தணர் வடிவங்கொண்டு அங்கே வந்தான். அவ் வந்தணரை நோக்கி, "திருமுது குன்றத்துக்குப் போகும் வழி யாது' என்று ஆளுடைய கம்பி கேட்க, "கூடலே யாற்றுார் போக இதுதான் வழி' என்று கூறிச் சிறிது துாரம் தொடர்ந்து மறைந்தார். இறைவன் அரு. பெருக்கை எண்ணி உருகிய சுந்தரர், "வடிவுடை மழு வேந்தி' என்றுதொடங்கி, கூடலேயாற்றுார்ப் பெருமானத் துதித்து, 'அடிகள் இவ்வழி போக்க அதிசயம் அறி யேனே!"என்று பாடினர். பின்பு கூடலேயாற்றுார் சென்று இறைவனே வணங்கி அங்கிருந்து திருமுது குன்றக்கை அடைந்தார். ..

திருக்கோபுரத்தைக் கண்டு பணிந்து எழுந்து கோயிலி லுள்ளே புக்கு இறைஞ்சி, பழமலே நாதரைப்பதிகம்பாடிப் பரவினர். பொருள் வேட்கையோடு பின்னும் வணங்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/53&oldid=585793" இலிருந்து மீள்விக்கப்பட்டது