பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நாயன்மார் கதை

"மெய்யை முற்றப் பொடி பூசியோர் நம்பி” என்ற பதிகத் தைப் பாடினர். இறைவன் திருவுள்ளம் மகிழ்ந்து பன்னி ரண்டாயிரம் பொன் அருளினன். அதனேப் பெற்று மகிழ்ந்த நாயனர் இறைவனிடம், "எம்பெருமானே, இவற்றை நான் எங்ங்னம் எடுத்துச் செல்வேன்? இப் பொன் முழுதும் ஆளுருக்கு வரும்படி அருள் செய்ய வேண்டும்" என்று விண்ணப்பித்துக் கொண்டார். அப்போது இறைவன் அசரீரியாக, "இந்தப் பொன்னே இங்குள்ள திருமணி முத்தாற்றில் இட்டுவிடு; திருவாரூர் சென்று அங்குள்ள குளத்தில் எடுத்துக் கொள்ளலாம்" என்று பணித்தான். தம்பிரான் தோழர் அந்தப் பொன் னில் ஒரு பகுதியை மச்சமாக வெட்டி எடுத்துக்கொண்டு எஞ்சியதை மணிமுத்தாற்றில் இட்டு விட்டுப் புறப் பட்டார்.

அங்கிருந்து தில்லை சென்று நடராசப் பெருமானே வணங்கிப் பேரானந்த வெள்ளத்தில் ஆழ்ந்தார். வழியி லுள்ள தலங்களைப் பணிந்து திருவாரூரை கண்ணினர். இறைவனேத் தரிசித்துக் கொண்டு பரவையார் திருமாளி கையைச் சார்ந்தார்.

ஒருநாள் பரவையாரிடம், "திருமுதுகுன்றத்து எம் பெருமான் நமக்குப் பெருநிதியம் அளித்தருளினன். அதை மணிமுத்தாற்றில் இட்டு இவ்வூர்க் குளத்திலே எடுத்துக் கொள்ளும்படி பணித்தான். அவ்வாறே பன்னிரண்டா யிரம் பொன்னேயும் ஆற்றிலிட்டு வந்தேன். இன்று போய்க் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொண்டு வரலாம், வா” என்று கூறி அழைத்தார். அதைக் கேட்ட பரவையார், "இது என்ன அதிசயம்? இப்படியும் ஒருவர் செய்வாரா?” என்று புன்முறுவல் பூக்க, "எம்பிரான் அருளால் ஆற்றி விட்ட பொன்னேக் குளத்தில் எடுத்து கிச்சயமாகத் தருவேன்' என்று உறுதி கூறி, அப் பெருமாட்டியாரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/54&oldid=585794" இலிருந்து மீள்விக்கப்பட்டது