பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் கதை

- நான்காம் பகுதி

62. முப்போதும் திருமேனி

தீண்டுவார் சிவபிரானல் அருளிச் செய்யப் பெற்றவை இருபத் தெட்டு ஆகமங்கள். அவற்றைச் சைவ சமயத்தின் அடிப் படை நூல்கள் என்பர். அவ்வாகம வழியே இறைவன் திருக்கோயில்களில் பூசை நடைபெறும். பூசைகள் நித்தியம், நைமித்திகம் என்று இருவகைப்படும். இவற் றைத் திருவள்ளுவர் பூசனே என்றும் சிறப்பு என்றும் கூறுவர். காள்தோறும் இறைவனைப் பூசித்தல் சித்தியம்; விசேஷ காலங்களில் உற்சவம் முதலியன செய்தல் நைமித் திகம். கித்தியத்தில் நேர்ந்த வழுக்களால் உண்டாகும் திங்குகளைப் போக்கும்பொருட்டு நைமித்திகத்தை விதித் திருக்கிருர்கள். -

ஆகம வழியே பூசை செய்வதற்குரியவர்கள் சிவ வேதி யர்கள். அவர்களை ஆதிசைவர் என்றும் கூறுவர். அவர் களே இறைவன் திருமேனிகளைத் திண்டும் உரிமை உடையவர்கள். அபிஷேக ஆராதனை செய்யும் தொழிலும் ஆகம அறிவும் உடையவர்கள் அவர்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/7&oldid=585747" இலிருந்து மீள்விக்கப்பட்டது