பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 - நாயன்மார் கதை

இறைவனுடைய திருமேனியைத் திண்டும் இந்தப் பெருமை இன்று கேற்று வந்தது அன்று: பழங்காலத்தி லேயே அவர்கள் இந்த உரிமையை உடையவர்களாக இருந்தார்கள். இன்றும் அவ்வுரிமையை உடையவர்களாக இருக்கிருர்கள். வருங்காலத்திலும் அந்த உரிமையுடன் இருப்பதற்குரியவர்கள்.

காலே, நண்பகல், இரவு என்னும் மூன்று போதும் இறைவன் திருமேனியைத் தீண்டிப் பூசைபுரியும் உரிமை யைப் பெற்றவர்கள் அவர்கள். அவர்கள் பெருமையைச் சேக்கிழார் பின்வருமாறு பாடுகிருர், 'தெரிந்துணரின் முப்போதும் செல்காலம் நிகழ்காலம் வருங்கர்லம் ஆனவற்றின்

வழிவழியே திருத்தொண்டின் விரும்பிய அர்ச் சனைகள் சிவ

வேதியர்க்கே உரியனஅப் பெருந்தகையார் குலப்பெருமை

யாம்புகழும் பெற்றியதோ!'

63. முழுநீறு பூசிய முனிவர்

சிவபெருமானுடைய அடியார்கள் அணிபவை சிவசின் னங்கள். அவை விபூதியும் ருத்திராட்சமும் ஆகும். கணவனேயுடைய சுமங்கலிகள் மஞ்சளும் தாலியும் அணி வதுபோல, இவ்விரண்டையும் அணிவது சிவனடியார் களுக்கு உரியது. - - -

திருநீற்றின் பெருமை அளவிட ஒண்ணுதது. பஸ்ம ஜாபாலோபகிஷத் என்ற உபகிடதம் அதன் சிறப்பைக் கூறுகிறது. இமயம் முதல் குமரி வரையில் நீறணியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/8&oldid=585748" இலிருந்து மீள்விக்கப்பட்டது