பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் }].

பட்டது” என்ருர், அரசன், "சைவ சமயத்தைச் சார்ந்த காவியம் என்ன இருக்கிறது?’ என்று கேட்டான். "காவியம் இப்போது இல்லை. ஆனால், காவியத்துக்குரிய பொருள் பல உண்டு. திருவருள் கூட்டுவித்தால் திருத் தொண்டர்களின் வரலாற்றை நானே காவியமாகப் பாடலாம் என்று எண்ணியிருக்கிறேன்" என்ருர்.

அதுகேட்ட மன்னன் அளவற்ற மகிழ்ச்சியை அடைக் தான்; "நீங்கள் அது செய்து முடித்தால் தமிழ் நாட்டுக்கே *_பெருமை உண்டாகும்" என்று சொல்லி அவரை ஊக் கின்ை. சேக்கிழார், அந்தக் காவியத்தில் முழுமனத்தை யும் வைத்து இயற்றவேண்டும் என்றும், தில்லையில் சென்று தங்கிக் காவியம் பாடவேண்டு மென்ற விருப்பம் உள்ள தென்றும் சொன்னர். மன்னன் அவரிடமுள்ள அமைச் சியற் பொறுப்பைத் தக்கவரிடம் ஒப்பிக்கச் செய்து, வேண்டிய வசதிகளுடன் தில்லேயில் இருந்து திருத் தொண்டர் புராணத்தைப் பாடும்படி ஏற்பாடுகளைச் செய்தான்.

சேக்கிழார் தில்லைவாசி ஆனர். இறைவன் திருக்கோயி அக்குச் சென்று வணங்கினர். அப்போது அசரீரியாக, 'உலகெலாம்' என்ற ஒலி எழுந்தது. அதையே முதலாகக் கொண்டு புராணம் பாடத் தொடங்கினர்.

இறைவன் இன்னருளால் புராணம் பாடி சிறை வேறியது. அரசனே வந்து சேக்கிழாரை வணங்கிப் போற்றி அரங்கேற்றத்துக்கு வேண்டியன செய்வித்தான். சித்திரை மாதம் திருவாதிரையன்று தில்லைத் திருக்கோயி வில் நடராசப் பெருமான் சங்கிதியில் சேக்கிழார் திருத் தொண்டர் புராணத்துக்கு உரை விரிக்கத் தொடங்கினர். அடுத்த ஆண்டு சித்திரைத் திருவாதிரைவரை அரங் கேற்றம் நடைபெற்றது. தமிழ் காட்டிலிருந்து ஆயிரக் கணக்கான அன்பர்களும், புலவர்களும், மடாதிபதிகளும் வந்து கேட்டு இன்புற்றனர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/97&oldid=585837" இலிருந்து மீள்விக்கப்பட்டது