பக்கம்:நாயன்மார் கதை-4.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நாயன்மார் கதை

அருண்மொழித் தேவர் கல்வியறிவிற் சிறந்தவராக இருப்பதை அறிந்த இரண்டாங் குலோத்துங்க சோழன் அவரைத் தன்னுடைய முதல் மந்திரியாகக் கொண்டு, உத்தம சோழப் பல்லவன் என்னும் சிறப்புப் பெயரை வழங்கினன். அரசனுக்குக் கண்போன்று விளங்கி, அமைச்சனுக்குரிய இலக்கணங்கள் கிரம்ப, யாரும் புகழும் வகையில் திகழ்ந்தார் சேக்கிழார். சோழ நாட்டில் உள்ள திருநாகேசுவரம் என்னும் தலத்தில் அவருக்கு ஈடுபாடு உண்டாயிற்று. அடிக்கடி அங்கே சென்று. தரிசித்து வந்தார். தம்முடைய ஊராகிய குன்றத்துாரில் ஒரு சிவாலயம் எடுப்பித்து அதற்குத் திருநாகேசுவரம் என்ற திருகாமம் அமைத்து வழிபட்டு வந்தார். இப் போது அக் கோயிலுள்ள பகுதிக்குத் திருநாகேசுவரம் என்ற பெயர் வழங்குகிறது.

திருமுறை கண்ட சோழனகிய முதலாம் இராசராச சோழன் காலத்துக்குப் பிறகு, தேவாரப் பதிகங்கள் தமிழ் காட்டில் எங்கும் பரவி வழங்கலாயின. மக்களுக்குத் தலவழி பாட்டிலும், சைவ சமய ஆசாரியர்களுடைய வழிபாட்டிலும் ஈடுபாடு அதிகமாயிற்று. சேக்கிழார் அமைச்சராதலினல் அடிக்கடி பல ஊர்களுக்குப் போய் வருவார். அங்கங்கே உள்ள கோயில்களைத் தரிசித்து அவற்றின் பெருமையை விசாரித்து அறிவார். நாயன்மார் கள் அவதரித்த தலங்களுக்குச் சென்று, அவர்களைப் பற்றிய செய்திகளேக் கேட்டுத் தெரிந்துகொள்வார்.

இவ்வாறு இருக்கையில், சோழ மன்னன் தண்டமிழ்ச் சுவை தேரும் இயல்பினளுதலின் சீவகசிந்தாமணியைப் படித்து இன்புற்ருன். அதில் அவன் மனம் ஆழ்ந்தது. சேக்கிழார் ஒரு நாள் மன்னனேடு பேசிக்கொண் டிருக்கை யில், அவன் சிந்தாமணியின் பெருமையை எடுத்துச் சொன்னன். சேக்கிழார், "தமிழ் கயம் உள்ள காவியங் தான் அது. ஆயினும், சமயத்துறையில் அது வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-4.pdf/96&oldid=585836" இலிருந்து மீள்விக்கப்பட்டது